Monday, February 26, 2024
- Advertisement -
HomeUncategorizedசென்ற ஆண்டு லவ் டூடே.. நடப்பாண்டில் Dada.. பிரிவியூ விமர்சனம்

சென்ற ஆண்டு லவ் டூடே.. நடப்பாண்டில் Dada.. பிரிவியூ விமர்சனம்

- Advertisement -

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி தமிழ் சினிமாவில் வெளியான மைக்கேல் ரன் பேபி ரன் போன்ற திரைப்படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக பொங்களுக்கு வெளிவந்த வாரிசு, துணிவு திரைப்படத்திற்கு தான் மக்கள் அதிக அளவு சென்றார்கள் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிக் பாஸ் பிரபலம் கவின் நடித்த டாடா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்திற்கான பிரிவியூ காட்சி நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு போடப்பட்டது. இந்தப் படத்தை பார்த்த பல விமர்சகர்களும் வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டு லவ் டுடே படம் எப்படி யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்றதோ,  அதேபோன்று ஒரு தாக்கத்தை தாதா திரைப்படம் ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

வேலை இல்லாத இளைஞன் ஒருவன் காதலித்து திருமணம் செய்து பிறகு குழந்தையை பெற்று அதனை வளர்க்க எவ்வளவு கஷ்டப்படுகிறார். காதலிக்கும் போது உள்ள சந்தோஷம் திருமணம் ஆகி குடும்பம் என்ற வந்தவுடன் இப்படி எதிர்கொள்கிறார் என்பதை வைத்து தாதா திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் டாடா திரைப்படத்தின் முதல் பாதி இளைஞர்களை குறி வைத்தும் இரண்டாவது பாதி குடும்பங்களை குறி வைத்தும் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் இவ்வளவு கடினமான கதைக்களத்தை நடிகர் கவின் சிறப்பாக கையாண்டு தனது தோளில் சுமந்து சென்றிருப்பதாகவும் அவர்கள் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த படம் நடிகர் கவினுக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். படத்தின் பலமாக யுவன் சங்கர் ராஜாவின் பாடலும், பின்னணி இசை உள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த அனைத்து விமர்சகர்களும் ஒரே மாதிரியான கருத்து தெரிவித்திருப்பதால் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்று மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

Most Popular