Thursday, October 3, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாநடிகர் விஜய்யுடன் நடிப்பதற்கு முன் கன்டிசன் போட்ட மோகன்.. இதனால் தான் லியோ படத்தில் இருந்தும்...

நடிகர் விஜய்யுடன் நடிப்பதற்கு முன் கன்டிசன் போட்ட மோகன்.. இதனால் தான் லியோ படத்தில் இருந்தும் விலகினார்.. !

தளபதி விஜய் – வெங்கட் பிரபு காம்போவில் சிறப்பாக உருவாகி வரும் திரைப்படம் கோட். அக்டோபர் மாதம் துவங்கிய ஷூட்டிங் தற்போது இறுதிக் கட்டப் பணியில் உள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் தன் காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு கட்சி பணிகளுக்கு தாவியுள்ளார். வெங்கட் பிரபு & கோ இன்னும் ஒரு சில சின்ன பணிகளுக்காக புதுச்சேரியில் ஷூட்டிங்கில் உள்ளது.

- Advertisement -

இப்படத்தில் விஜய்யுடன் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. பிரபு தேவா, மோகன், பிரசாந்த், மீனாக்ஷி சவுத்ரி, ஸ்னேஹா, லைலா, யோகி பாபு மற்றும் சிலர் என பெரிய பட்டியல் உள்ளது. இதனாலும் இந்தப் படம் விஜய்யின் கேரியரில் வித்தியாசமாக இருக்கும் என வந்த தகவலும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் மோகன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இப்படத்தில் நடிப்பதற்கு முன் ஒரு கண்டிசன் போட்டுள்ளார், அது அவர் கேட்ட படி அமையவே இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதாவது வெங்கட் பிரபு நடிகர் மோகனை அணுகியபோது, ” கதையில் எனக்கு அளிக்கும் கதாபாத்திரம் பலமாக இருந்தால் மட்டுமே சொல்லுங்கள். அப்படி இல்லை என்றால் நடிக்க மாட்டேன் ” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

பின் வெங்கட் பிரபு சொன்ன கதையும் கதாபாத்திரமும் நடிகர் மோகனுக்கு பிடித்ததால் நடிக்க ஒப்புதல் அளித்தார். நடிகர் விஜய் என்றவுடன் பெரிய படம் எனக் கருதி அணுகிய உடனே சம்மதிக்காமல் தனக்கு கதை பிடித்தால் மட்டுமே நடிக்கும் கொள்கையில் மோகன் இருக்கிறார். அதன்படி தான் இதற்கு முன் விஜய் படத்தில் அவருக்கு எதிராக நடிக்க வாய்ப்புக் கிடைத்தும் மறுத்தார்.

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் அர்ஜுன் செய்த ஹரால்ட் தாஸ் கதாபாத்திரத்துக்கு முதன் முதலில் மோகனைத் தான் நடிக்க வைக்க விரும்பினார். அவர் கதைக் கேட்ட பிறகு திருப்த்தி அளிக்காததால் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பின்னரே அர்ஜுன் இப்படத்தில் உள்ளே நுழைந்தார். லியோ படத்தில் அர்ஜுன் செய்த கதாபாத்திரம் ஓரளவு பலமாகத் தான் இருக்கும், இருப்பினும் மறுத்துவிட்டார்.

ஆனால் கோட் படத்தில் முழு விருப்பத்தோடு விஜய்யுடன் நடித்துள்ளார். கோட் திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் வகையில் உருவாக்கப்படுவதாக முன்னர் தகவல்கள் வந்தன. அதற்கேற்பவே சில அப்டேட்களும் அமைந்தன. இப்படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் வருகிறார், அதற்காகத் தான் கடந்த வாரம் இளமைத் தோற்றதக் கதாபாத்திரத்தின் காட்சிகளை உருவாக்க வெங்கட் பிரபுவும் விஜய்யும் அமெரிக்கா பயணித்தனர். மேலும் இப்படத்தின் தோனி/ருதுறாஜ்/ரெய்னா ஆகிய பெரிய சி.எஸ்.கே வீரர்களும், நடிகர் சிவகார்த்திகேயனும் சிறப்புத் தோற்றம் அளிப்பதால் படம் மேலும் சில எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளது.

Most Popular