Wednesday, November 20, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஉங்க கிட்ட காசு எதாவது கேட்டாரா? உங்களுக்குலாம் நோய் வராதா..ரோபோ சங்கருக்காக கொதித்து பேசிய நடிகர்...

உங்க கிட்ட காசு எதாவது கேட்டாரா? உங்களுக்குலாம் நோய் வராதா..ரோபோ சங்கருக்காக கொதித்து பேசிய நடிகர் குமரமூர்த்தி.. நன்றி சொன்ன மனைவி

நடிகர் ரோபோ சங்கர் காமெடி, மிமிக்கிரி, தொலைக்காட்சி மேடை என பல்வேறு தளங்களில் தனது உழைப்பை போட்டு தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். பெரிய உருவம் சாதாரண பேச்சு வழக்கு என ரசிக்க வைக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்துபவர் ரோபோ சங்கர்.

- Advertisement -

தற்போது காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களும் ரோபோ சங்கர் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரோபோ ஷங்கரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ரோபோ சங்கரின் உடல் மெலிந்து காணப்பட்டது.

இது ரோபோ சங்கரா என்று பலரும் ஆச்சரியப்படும் வகையில் உடல் எடையை அவர் குறைத்து இருந்தார். இது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வந்தனர். மேலும் ரோபோ சங்கர் குறித்து பல வதந்திகளும் சுற்றி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் குமரமூர்த்தி தற்போது ஒரு வீடியோ போட்டு உள்ளார்.

- Advertisement -

அதில் ரோபோ ஷங்கரின் உடலுக்கு என்ன ஆனது என்பதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். அதில் நடிகர் ரோபோ சங்கருக்கு உடல் நலம் சரியில்லை என்பது உண்மைதான். அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு இருக்கிறது.இது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

- Advertisement -

ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மக்களை சிரிக்க வைப்பதற்காக அவர் நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட காலகட்டத்தில் நடிகர் ரோபோ ஷங்கருக்கு உறுதுணையாக ரசிகர்கள் இருக்காமல் அவரை கிண்டல் செய்யும் விதமாக சிலர் பேசி வருகிறார்கள்.

அதிலும் ஒரு பத்திரிக்கை ரோபோ சங்கரை பார்த்து பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி இருக்கிறார் என்றெல்லாம் எழுதி இருக்கிறார்கள். இது கொஞ்சமும் சரி கிடையாது. அவர் என்ன உங்களிடம் வந்து பணம் கேட்டாரா? இல்லை உதவி என்று நின்றாரா?அப்போது எப்படி பஞ்சம் என்று சொல்கிறீர்கள்.

மனிதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். அதிலிருந்து மீண்டு வருவார்கள். அதற்காக இப்படி செய்வது சரி கிடையாது. ஏன் உங்களுக்கெல்லாம் நோயே வந்தது கிடையாதா? மஞ்சள் காமாலை வந்து எத்தனை பேர் மீண்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் அவரோட மனதை பாதிக்காத வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

ரோபோ ஷங்கருக்கு முழு உறுதுணை கொடுத்து அவர் பழைய மாதிரி திரும்பி வர ஆதரவு கொடுக்க வேண்டும் என நடிகர் குமரமூர்த்தி கூறியிருக்கிறார். குமரமூர்த்தி இந்த பேச்சுக்கு ரோபோ சங்கரின் மனைவி பிரியா மற்றும் மகள் இந்துஜா நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

Most Popular