Friday, September 13, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாசூர்யாவை ஏமாற்றி வாடிவாசல் படத்துக்கு தெலுங்கு நடிகரை அணுகிய வெற்றிமாறன்.. அவர் கதைப் பிடிக்கவில்லை எனக்...

சூர்யாவை ஏமாற்றி வாடிவாசல் படத்துக்கு தெலுங்கு நடிகரை அணுகிய வெற்றிமாறன்.. அவர் கதைப் பிடிக்கவில்லை எனக் கூறியதால் அதிர்ச்சி.. !

வெற்றிமாறன் – சூர்யா இணைந்து வாடிவாசல் எனும் படத்தை உருவாக்குவதாக சுமார் 4 ஆண்டுகள் முன்னர் செய்திகள் வந்தன. அதன் பிறகு இடையில் ஒரு முறை படத்துக்கான பயிற்சி என படக்குழுவினரின் சில புகைப்படங்கள் வந்தன. மற்றப்படி படம் சுத்தமாக நகரவில்லை.

- Advertisement -

சூர்யாவும் அடுத்தடுத்து வெவ்வேறு படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். அதே போல வெற்றிமாறனும் விடுதலை படத்தின் பணிகளில் கவனம் செலுத்தினார். வெற்றிமாறன் இது போல படத்தை இழுத்து அடிப்பது, அமீரை வில்லனாக தேர்ந்தெடுத்தது என சூர்யாவுக்கு அவர் மேல் கோபம்.

இதையெல்லாம் கடந்த வாரம் அமர்ந்து பேசித் தீர்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன. இதனை நடிகர் & இயக்குனரான அமீர் கூட அண்மையில் பேட்டிகளில் கூறினார். செப்டம்பர் மாதம் படத்தைத் துவங்கி 2 வருடங்கள் ஷூட்டிங் போக திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதில் மற்றொரு டுவிஸ்ட் வைத்துள்ளார் வெற்றிமாறன்.

- Advertisement -

இப்படத்தின் சூர்யாவை வைத்து தொடர வெற்றிமாறனுக்கு விருப்பம் இல்லைப் போல. அதனால் அவருக்குத் தெரியாமல் வெற்றிமாறன் வாடிவாசல் கதையை தெலுங்கு நடிகர் ராம்சரணிடம் கூறியுள்ளார். சூர்யாவுக்கு பதிலாக ராம்சரணை ஹீரோவாக வைத்து படத்தை நகர்த்த திட்டமிட்டிருந்த வெற்றிமாறனுக்கு மற்றொரு பெரிய டுவிஸ்ட்.

- Advertisement -

இந்தக் கதையைக் கேட்ட ராம்சரண் தனக்கு இதுப் பிடிக்கவில்லை என நேராக கூறியுள்ளார். வெற்றிமாறனின் படங்கள் தனக்குப் பிடித்தாலும் இது போன்ற ஒரு கதையில் நடிக்க விருப்பமில்லை தனக்கு திருப்தியாக இல்லை என மறுத்துள்ளார். இந்தச் செய்தி எப்படியோ சூர்யா காதுக்கு வர, இது அவரை மேலும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யாவுக்கு இது பெரிய அவமானமாக இருக்கும். எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்ற ஓர் செயலை வெற்றிமாறன் செய்துள்ளார். இத்தகு பிரச்சனைகள் இருக்கும் சூழலில் வாடிவாசல் படத்திலிருந்து நிச்சயம் சூர்யா விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மற்றொரு வெற்றிமாறன் – தனுஷ் படத்தை எதிர்பார்க்கலாம்.

Most Popular