Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஅவரைத்தான் அதிகம் சைட் அடித்தேன்! நடிகர் விஷால் ஒபன் டாக்

அவரைத்தான் அதிகம் சைட் அடித்தேன்! நடிகர் விஷால் ஒபன் டாக்

புரட்சித் தளபதியான நடிகர் விஷாலின் அடுத்த திரைப்படம் மார்க் ஆண்டனி. பாட்ஷா படத்தில் வில்லன் கதாபாத்தின் பெயரான மார்க் ஆண்டனியை இப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளார்கள்.
3 வேடங்களில் விஷால் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

எஸ் ஜே சூர்யா இவருடன் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் ட்ரைலரிலேயே மாஸ் காட்டுகிறது !!!
சமீபத்தில் மார்க் ஆண்டனியின் ப்ரோமோஷன் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் விஷால் தன் கருத்துகளை உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

முதலில் இயக்குனர் ஆதிக் உடன் இணைவதை நன்கு யோசியுங்கள் என்று பலரும் கருத்து தெரிவித்த போது, என்னுடைய கடந்த காலத்தையே நான் யோசிக்க மாட்டேன்! அப்படி இருக்கும்போது ஆதியின் கடந்த கால ஏற்ற இறக்கங்களை பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறி தான் மார்க் ஆண்டனியில் நடிக்க ஆயத்தமானாராம் விஷால்.

- Advertisement -

எஸ் ஜே சூர்யாவை லயோலா கல்லூரியில் படிக்கும் போதே தனக்குத் தெரியும் என்றும், அவரது சுறுசுறுப்பான நடவடிக்கைகளை தான் கவனித்து இருக்கிறேன் என்றும் தன் மலரும் நினைவுகளை கூறினார்.

- Advertisement -

மேலும் தான் 25 வருடங்களுக்கு முன் பார்த்த எஸ் ஜே சூர்யா, அப்படியே இப்போதும் அதே வெறியுடன் மற்றும் அதே சுறுசுறுப்புடனும் இருப்பது வியப்பாக உள்ளது என்றும் கூறினார்.

வில்லனாக நடிப்பது கூட சுலபம் !ஆனால் வில்லன் கதாபாத்திரத்திலேயே நகைச்சுவையுடன் நடிப்பது மிகவும் கடினம் !ஆனால் அதனை எஸ்.ஜே சூர்யா மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார் என்று பாராட்டு தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் நடிகையை சைட் அடித்ததை விட எஸ் ஜே சூர்யா வின் குறும்புத்தனத்தை தான் அதிகம் சைட் அடித்தாராம் விஷால்!
நடிகர் விஜய்க்கு மனதார நன்றி கூறிய விஷால் அவர் டீசர் ஆரம்பித்து வைத்த பிறகு, பல நல்ல பாசிட்டிவான வைபுகள் படத்திற்கு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

Most Popular