Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஜெயிலர் திரைப்படத்தின் காவலையா பாடலுக்கு நடிகை தமன்னாவின் அட்டகாசமான இன்ஸ்டா ரீல்ஸ் …. ட்ரெண்டிங் வீடியோ!

ஜெயிலர் திரைப்படத்தின் காவலையா பாடலுக்கு நடிகை தமன்னாவின் அட்டகாசமான இன்ஸ்டா ரீல்ஸ் …. ட்ரெண்டிங் வீடியோ!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . தமிழ் சினிமாவில் முன்னணி  நட்சத்திரங்களுடனும்  இளம் கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து  ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் .

- Advertisement -

சில காலம் தமிழ் சினிமா பக்கம் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது  சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம்  ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க  அனிருத் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருப்பதை தொடர்ந்து  படத்தின் முதல் பாடல்  நேற்று வெளியிடப்பட்டது .

அனிருத்தின் துள்ளலான இசையில்  கபானா எனத் தொடங்கும் அந்த பாடல்  நேற்று வெளியானதிலிருந்து  இன்றுவரை ஒரு நாளில் மட்டும் யூட்யூபில்  14 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து  சாதனை படைத்திருக்கிறது . இந்தப் பாடலில் தமன்னாவின் துள்ளலான கவர்ச்சி நடனமும்  சூப்பர் ஸ்டார் இன் ஸ்டைலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கின்றன .

- Advertisement -

நேற்றைய பாடலில்  தமன்னாவின் ஆட்டத்தில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள்  இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  அந்தப் பாடலின் நடனத்தை ரீல்சாக வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. இதனை ரசிகர்கள்  ஏக போகமாக ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் .

- Advertisement -

வித்தியாசமான இசையுடன் இருக்கும் இந்தப் பாடலை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அண்ணாத்த படத்தின் தோல்வியை தொடர்ந்து வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். இதற்காகத்தான் அவர் ஜெய்லர் திரைப்படத்திலும் தனது மிகப் பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார் . மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் பிரம்மாண்டமாக பான் இந்தியா சினிமா போல உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . மேலும் இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . திரைப்படம் வருவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் விரைவிலேயே இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular