தல அஜித்குமார் 63வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6:30 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியானது. இந்த அப்டேட்டை எதிர்பார்த்து நேற்று முதல் வெறியாக இருந்தனர். அவர்களது எதிர்பார்ப்புக்கு இணங்க தரமான தலைப்பு வெளியாகியுள்ளது. அதனைக் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
சில மாதங்கள் முன்பு அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி கைகோர்க்க இருப்பதாக வகுவான் sதகவல்கள் வந்தன. அந்தக் கூட்டணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மித்ரி மூவீஸ் தயாரிப்பில் தேவி ஶ்ரீ பிரசாத்தின் மிரட்டலான இசையில் இப்படம் உருவாகவுள்ளது. படத்தின் தலைப்பு ‘ குட் பேட் அக்லி ‘ ஆகும். எப்போதும் ‘ வ ‘ வரிசையில் தலைப்பு வைக்கும் அஜித் இம்முறை அதில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்தத் தலைப்பு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் தலைப்பு பிரபல ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த ‘ தி குட் தி பேட் தி அக்லி ‘ போலவே உள்ளது. மேலும் மற்றொரு கொரியன் படமான ‘ தி கேங்ஸ்டர் தி காப் தி டெவில் ‘ போலவும் உள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேற்கண்ட இரு படங்களும் தரமானவை, அதே சாயலில் அஜித்தின் 63வது படமும் அமைய வேண்டுமென ரசிகர்கள் ஏங்குகிறார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் பழைய ஸ்டைலான அஜித்குமாரை இப்படத்தில் கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் ஆதிக் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் அதிரடியான ஃபேன் பாய் சம்பவம் செய்யக் காத்திருப்பார். படத்தில் அஜித் வில்லனாக நடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து மிரட்டுவார் எனவும் தகவல்கள் பேசிக் கொள்கின்றனர்.
ஒரு ஹீரோ கதாபாத்திரம், கேங்ஸ்டர் போன்ற ஒரு கதாபாத்திரம், ஒரு வில்லன் ஆகியவை சுற்றித் தான் படம் நகரும் என தலைப்பில் இருந்து கணிக்கலாம். நல்லவனும் கெட்டவனும் இணைந்து மிகக் கொடூரமானவனைத் தீர்த்துக் கட்டுவதே கதையாக இருக்கும். இதில் அஜித், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்தால் தியேட்டர் கொழுந்து விட்டு எரியும்.