Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஅஜித் 64 : அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தம்.. சிவா இல்லாததால் மற்றொரு புதிய இயக்குனரை பிடித்துள்ள...

அஜித் 64 : அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தம்.. சிவா இல்லாததால் மற்றொரு புதிய இயக்குனரை பிடித்துள்ள அஜித்.. !

நடிகர் அஜித்குமார் கடந்த 3/4 வருடங்களாக சினிமா ஒரு பக்கம், தன் வாழ்கை ஒரு பக்கம் என இரண்டிற்கும் சமமாக நேரத்தை ஒதுக்கி வருகிறார். வழக்கமாக இது போன்ற பெரிய ஹீரோக்கள் அடுத்தடுத்து படங்கள் நடித்து தொடந்து அவர்கள் இருக்கும் சிம்மாசனத்தை தக்க வைப்பதில் குறியாக இருப்பர்.

- Advertisement -

ஆனால் அஜித் கடந்த 4 ஆண்டுகளில் வலிமை, துணிவு ஆகிய இருப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதற்கு இடையில் பைக் டூர், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என தன் கனவு, வாழ்க்கையை மிக சந்தோஷமாக அனுபவித்து வருகிறார். இதைப் பார்க்கையில் ரசிகர்களுக்கும் ஓர் ஆனந்தம், ஊக்கம்.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களைக் கையில் வைத்திருக்கும் அஜித் இதனை விரைவில் முடித்துவிட்டு தன் 64வது படத்துக்கு நகரவுள்ளார். அதற்கான இயக்குனர் சந்திப்பு கூட ஏற்கனவே முடிந்துவிட்டது. முதலில் அஜித் 64 படத்தை சிறுத்தை சிவா தான் இயக்கவுதாக இருவரும் பேசிக் கொண்டனர். ஆனால் சிவா இன்னும் கங்குவா படத்தின் பணிகளில் உள்ளார். மேலும் ஹிந்தியில் மற்றொரு படத்தையும் இயக்குவதாக வாக்களித்துள்ளனர்.

- Advertisement -

இதனால் அஜித் – சிவா மாறுபாடு ஜோடி சேர்வது கடினம். அதனால் அஜித் மற்றொரு இயக்குனரிடம் கதைக் கேட்டுள்ளார். தனி ஒருவன், வேலைக்காரன், வேலாயுதம் ஆகியப் படங்களை இயக்கிய மோகன் ராஜா தான் அந்த இயக்குனர். கதை அஜிதுக்குப் பிடிக்க நிச்சயம் படத்தை செய்யலாம் என கூறியுள்ளார். ஒரு வேளை சிவா படம் நடைபெறவில்லை எனில் அஜித் 64 படத்தை மோகன் ராஜா இயக்குவார், அப்படி இல்லையெனில் அஜித் 65 படமாக அது அமையும்.

- Advertisement -

இயக்குனர் சிவா பிஸியாக இருப்பதால் அஜித் 64 படத்தை மோகன் ராஜா தான் பெரும்பாலும் இயக்குவார். தன் சகோதரன் ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் 2 எடுப்பதாக இருந்த படம், பெரிய பட்ஜெட்டாக அமைந்ததால் ஏ.ஜி.எஸ் நிறுவனம் இதில் இருந்து பின்வாங்கியுள்ளது. மோகன் ராஜாவும் ஃப்ரீயாக இருப்பதால் அஜித் படத்தின் முதற் கட்ட ஸ்கிரிப்ட் பணிகளை இப்போது துவங்கினால் சரியாக இருக்கும்.

கடந்த ஓர் ஆண்டாக விட்டு விட்டு ஷூட்டிங்கில் இருக்கும் விடாமுயற்சி படத்தை ஜூலை கடைசி வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என இருக்கிறார். மே முதல் வாரம் ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டது. ஜூன் 7 வரை ஹைதராபாத்தில் இது நடக்கிறது. சர்ப்ரைஸ் போஸ்டர் ஒன்றும் 4 நாட்களுக்கு முன் வெளியானது.

இப்படத்தின் முதல் அட்டவணையை முடித்துவிட்டு விடாமுயற்சியும் ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதன் பின்னர் குட் பேட் அக்லி படமும் செப்டம்பர் – அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு ஆகிவிடும். அதன் பின்னர் அஜித் 64 இந்த ஆண்டே துவங்கப்படும்.

Most Popular