சினிமா

‘அஜித் 64’ படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் இயக்குகிறார்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித், தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு எனப் பெயரிட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். அஜித் எப்படி இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் தொடர்ந்து 4 நடித்து வந்தாரோ, அதேபோல தற்போது வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 3வது படம் இதுவாகும். நேர்கொண்டபார்வை , வலிமை, படங்களைத் தொடர்ந்து தற்போது ‘துணிவு’ படத்திலும் நடித்து வருகின்றார்.

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றி பெற்றதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் உருவான வலிமை படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு இடையே ஏற்படுத்தியது. ஆனால் ரசிகர்கள் தவிர்த்து பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகும் துணிவு படத்தை வெற்றி படமாக கொடுக்கும் நோக்கத்தில் வேலை செய்து வருகின்றனர்.

அஜித் துணிவு படம் முடிவுற்றவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 63 படத்தை நடிக்க உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் வினோத் மற்றும் விக்னேஷ் சிவனை தொடர்ந்து, அஜித்தின் 64வது படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விக்ரம் வேதா, சூரரைபோற்று போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரி சமீபத்தில் சுழல் எனும் வெப் சீரிஸை இயக்கியிருந்தார். இதுவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தமிழ் திரையுலகில் நம்பிக்கையான டைரக்டர்களில் ஒருவர் என பெயரிட்டுள்ள இவர், அஜித் குமாரை இயக்குகிறார் என்ற செய்திகள் வெளிவந்தவுடன் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் காணப்படுகின்றனர். ட்விட்டரில் கொண்டாட்டத்தை காண முடிகிறது. ஏனெனில் அஜித் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான இயக்குனர்களிடம் நடித்து வருகிறார். தற்போது இவரை போன்ற கதைக்களத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் இயக்குனர்கள் இயக்குவதால் அஜித்தை வேறொரு கோணத்திலும் காணலாம் என்ற ஆர்வமும் எழுந்திருக்கிறது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top