Featured

அஜித் – ஐஷ்வர்யா ராய் காம்போ… ! AK62 படத்தில் நடிப்பவர்களின் பட்டியல் வெளியீடு… !

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக இருப்பவர் தல அஜித் குமார் இவரது நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் படம் துணிவு . இந்தப் படத்தை வினோத் அவர்கள் இயக்க பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார் .

மஞ்சு வாரியார் சமுத்திரக்கனி ஜான் கொக்கன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படமானது கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது மேலும் இந்த திரைப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது . இந்தப் படமானது 100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .

Advertisement

துணிவு படத்தை அடுத்து தல அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கிறார் . அந்தப் படம் அவரது 62 ஆவது படமாகும் . இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது . இந்தத் திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பதற்கு அரவிந்த் சாமியும் மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானமும் ஒப்பந்தம் ஆகி இருந்தனர் . இந்நிலையில் மற்ற நடிகர் நடிகைகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர் .

இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வந்தன பின்னர் த்ரிஷா நடிப்பதாக இருந்தது . ஆனால் தற்போது முன்னாள் உலக அழகியும் பாலிவுட்டின் முன்னணி நாயகிமான ஐஸ்வர்யா ராய் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்திற்குப் பிறகு அஜித்தும் ஐஸ்வர்யா ராயும் ஒரே திரைப்படத்தில் நடிக்கிறார்கள் . மேலும் ஐஸ்வர்யா ராய் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை .

Advertisement

இது தவிர லிஃப்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்ப கொடுத்த கவினும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் . இவர்களைத் தவிர கைதி மற்றும் மாஸ்டர் படங்களின் மூலம் புகழ்பெற்ற அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் . இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க இருக்கிறார் . இந்தப் படமானது லைக்கா நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்க பட இருக்கிறது . மேலும் இந்தப் படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

இந்தப் படத்திற்கான இணையதள உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது . இந்த அறிவிப்பை அந்த நிறுவனமே அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளது . படத்தின் பூஜையை ஆரம்பிக்காத நிலையில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஏகே 62 படத்தை பெருந்தொகைக்கு வாங்கி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக்கியுள்ளது . இத்திரைப்படத்திற்கான சாட்டிலைட் உரிமைகளை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது . படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது சபரி மலைக்குச் சென்றுள்ளார் . இவர் இந்த படத்திற்காக நேற்று சபரிமலையில் சிறப்பு வேண்டுதலை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top