2011 – 2020 தசாப்தத்தில் அஜித்துடன் தொடர்ந்து படங்கள் செய்துக் கொண்டிருந்தார் இயக்குனர் தான் சிவா. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை உருவாக்கியது இக்கூட்டணி. இதில் விவேகம் மட்டுமே சுமாராக ஓடியது மற்ற அனைத்தும் சூப்பர்ஹிட். கூட்டணியில் இருந்து வெளியேற இருவரும் இதுவரை வெவ்வேறு படங்கள் செய்தனர், செய்துக் கொண்டும் உள்ளனர்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித் – சிவா தற்போது இணைய உள்ளனர். இது பற்றி கடந்த ஆண்டே சில செய்திகள் வந்தன ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அது நடக்கவில்லை. இந்த ஆண்டு அப்படத்தை துவங்க பேச்சு வார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது. தயாரிப்பு நிறுவனமும் அதற்கான பணியில் தீவிரமாக உள்ளனர்.
இயக்குனர் சிவாவை வைத்து இரு படங்கள் தயாரிக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டிருந்தது. அண்ணாத்தைக்குப் பிறகு சிவா, கங்குவா படம் பக்கம் சென்றுவிட்டார். தற்போது மீண்டும் அவரை வைத்து மற்றொரு படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தில் அஜித் நடிப்பது பற்றி ஏற்கனவே பேச்சு வார்த்தை நடத்தி ஒப்புதல் வாங்கினர். இந்த ஆண்டு அஜித் – சிவா படத்தை துவங்குவது குறித்து இரு தரப்பினரும் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளனர்.
அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரு படத்தை முடித்துவிட்டு சிவாவுடன் படம் செய்ய திட்டம் வைத்துள்ளார். அவ்வபோது இயக்குனர் சிவாவை தொலைபேசியில் அழைத்து கங்குவா ஷூட்டிங் எப்படி போகிறது, எப்போதும் அடுத்தப் படத்தைத் துவங்கலாம் என பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார். அனைத்தும் தற்போது கூடி வரும் வேளையில் சில மனஸ்தாபங்கள்.
சன் பிக்சர்ஸ் சற்று கடுமையான நிறுவனம். அஜித் தனக்கென்று ஒரு பெரிய சம்பளத்தை கேட்டுள்ளார். ஆனால் அதற்க்கு சன் நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை, அஜித்திடம் குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அது மட்டுமில்லாமல் படத்தின் புரொமோஷனுக்காக 2 மணி நேரம் நேர்காணல் நிகழ்ச்சி செய்ய வேண்டுமெனவும் கட்டளை இட்டுள்ளனர்.
ஆனால் அஜித்தோ இது போன்ற நேர்காணல்கள், மேடை நிகழ்ச்சிகள் ஆகிவற்றில் இருந்து விலகி சுமார் 13 ஆண்டுகள் பக்கம் ஆகிவிட்டது. இதற்கு அவர் நிச்சயம் ஒப்புக் கொள்ளவும் மாட்டார். இதனால் சன் பிக்சர்ஸ் சிவா – அஜித் படத்தை தயாரிப்பதில் இருந்து விலக அதிக வாய்ப்புகள் உள்ளன. தயாரிப்பு நிறுவனம் மாரறுமே தவிர படம் கைவிடப்படவில்லை. செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் சிவா படத்தைத் துவங்க அஜித் திட்டம் தீட்டியுள்ளார்.