Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஷங்கரை அழைத்துப் படம் செய்யலாம் என கூப்பிட்ட அஜித்.. மேலும் மற்றொரு இயக்குனரிடமும் கதை கேட்டுள்ளார்.....

ஷங்கரை அழைத்துப் படம் செய்யலாம் என கூப்பிட்ட அஜித்.. மேலும் மற்றொரு இயக்குனரிடமும் கதை கேட்டுள்ளார்.. !

நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாக சினிமா பக்கம் மிகவும் மெதுவாகவே பயணிக்கிறார். வலிமை, துணிவு ஆகிய இரு படங்களைத் தவிர கடந்த 4 ஆண்டுகளில் அவர் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருந்தனர், ஆனால் அடுத்தடுத்து அஜித்தின் படங்கள் இவ்வாறு ஆவாதால் அவர்களும் பெரிதாக கண்டுகாமல் அப்டேட்ஸ் வரும்போது மட்டும் கொண்டாடும் நிலைக்கு மாறிவிட்டனர்.

- Advertisement -

தற்போது அஜித்குமார் அவர்கள் இது அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டு மீண்டும் முன்னர் போல தொடர்ந்து படங்கள் நடிக்க திட்டமிட்டுள்ளார். அண்மையில் அவரின் கையில் இரு படங்கள் உள்ளன. ஒன்று மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றொன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி. இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் துவங்கப்பட்டுள்ளது.

கடந்த ஓர் ஆண்டாக விட்டுவிட்டு ஷூட்டிங்கில் இருக்கும் விடாமுயற்சி படத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது. பொருளாதார சிக்கலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டுவரும் லைகா நிறுவனம் அடுத்த ஒரு மாதத்தில் விடாமுயற்சி படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் முதல் அட்டவணை முடித்துவிட்டு அஜித் நேராக விடாமுயற்சி படம் பக்கம் செல்கிறார்.

- Advertisement -

ஜூலை இறுதிக்குள் விடாமுயற்சி படத்தை நிறைவு செய்துவிட்டு மீண்டும் குட் பேட் அக்லி படத்திற்க்கு திரும்புகிறார். ஆதிக் இயக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பல்வேறு வெளிநாடுகளில் ஷூட் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் படமும் முடிக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள்.

- Advertisement -

இதன் பின்னர் தன் 63வது படம் பற்றி அஜித் ஆலோசிக்க துவங்கிவிட்டார். முதலில் இந்தப் படத்தை சிறுத்தை சிவாவுடன் செய்ய வேண்டும் என எண்ணினார், ஆனால் சிவா கங்குவா படத்தை முடித்துவிட்டு ஹிந்தி படம் ஒன்றை இயக்காவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அதனால் இந்தப் காம்போ இப்போதைக்கு கூடுவது கடினம்.

அடுத்ததாக இயக்குனர் மோகன் ராஜா கூறிய கதையை அஜித் ஓ.கே செய்துள்ளார். அஜித் 63 இல்லை என்றால் அஜித் 64 நிச்சயம் பட செய்யலாம் என அவருக்கும் வாக்கும் கொடுத்துள்ளார். இவர்கள் இருவர் தவிர மேலும் இரண்டு பெரிய இயக்குனர்களை தானே தொலைபேசியில் அழைத்து படம் செய்யலாம் என கேட்டுள்ளார்.

ஒருவர் இதற்கு முன்பு மூன்று படங்கள் ஒன்றாக பயணித்த ஹெச்.வினோத். விஜய்யுடன் அடுத்ததாக இணையும் வினோத் இப்படத்தை முடித்துவிட்டு பார்க்கலாம் என பதில் அளித்துள்ளார். மற்றொருவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். ஷங்கர் – அஜித் காம்போ கூடினால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கும். அதற்க்கு வாய்ப்பும் தற்போது உள்ளது.

ஷங்கர் அடுத்து இந்தியன் 2, 3 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய மூன்று படங்களில் பிஸியாக உள்ளார். இதனை முடித்துவிட்டு வேல்பாரி எனும் நாவலை படமாக்கும் திட்டத்தில் உள்ளார். இந்தப் படம் முடித்துவிட்டு அஜித்துடன் அவர் இணைய கூட வாய்ப்புகள் உள்ளது, அல்ல வேல்பாரி படம் முன்பே கூட எதேனும் புதிய கதையை செய்யலாம்.

Most Popular