தமிழ்நாடு திரையரங்குகள் புதுப் படங்கள் இல்லாமால் ரீ ரீலீஸ் கலாச்சாரத்தை வைத்து நாட்களை ஓட்டி வருகிறார்கள். கடந்த மாதம் வெளியான விஜய்யின் விண்டேஜ் படமான கில்லி வசூல் சாதனைகளை புரிந்தது. விஜய் ரசிகர்களும் தியேட்டருக்குள் ஆட்டம் போட்டு கொண்டாடி தீர்த்தனர்.
விஜய்க்கு போட்டியாக இன்று மே 1 அஜித்தின் பிறந்தநாளில் தீனா மற்றும் பில்லா படங்கள் மீண்டும் வெளியானது. வழக்கம் போல அது ரகளைகளாக மாறி இரு தரப்பினரும் மோதினர். சமூக வலைத்தளத்தில் கூட யார் படம் பெரிது என மாறி மாறி சண்டை போட்டு வருகிறார்கள். எந்த யுகத்துக்கு சென்றாலும் இவர்களது சண்டை ஓயாது போல.
அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தீனா படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் திரண்டது. சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் பாடலுக்கு வைப் செய்து மகிழ்ந்தனர். ஆனால் இடையில் சரவெடியை தியேட்டருக்குள் வெடித்து ரகளைகள் செய்தனர். இது ரோஹிணி திரையரங்க நிர்வாகிகளை அதிருப்தியில் தள்ளியுள்ளது. வாரிசு துணிவு வெளியீட்டின் போது கூட தியேட்டரை இவ்வாறு தான் நாசமாக்கினர்.
அது மட்டுமில்லாமல் படம் முடிந்த பின் ஒரு பேட்டியில் தீவிர அஜித் ரசிகர் ஒருவர், இரண்டாவது முறை பாடலை ரிப்பீட் செய்யுங்கள் எனக் கேட்ட போது அவர்கள் செய்யவில்லை என்றார். ” விஜய்யின் கில்லி பட பாடல்களை மட்டும் ரிப்பீட் செய்தனர், ஆனால் தல படத்துக்கு செய்ய மாட்டறாங்க. இப்படியெல்லாம் செய்தால் ரோஹிணி இருக்காது. ” என கூச்சல் போட்டார்.
அடுத்ததாக காசி திரையரங்கில் கில்லி படத்தின் பேனரை அஜித் ரசிகர் ஒருவர் மேலே ஏறி கிழித்து விட்டார். இதனை விஜய் ரசிகர்கள் பெரிய சிக்கலாக உண்டாக்க, உடனே தியேட்டர் நிர்வாகிகள் மீண்டும் கில்லி படத்தின் பேனரை வைத்தனர். மறுபக்கம் அஜித் ரசிகர்கள் அலப்பறை செய்ய உடனே அதையும் நீக்கினர். ஒரு படத்தை தனக்கு பிடித்த நடிகனின் படத்தைக் கூட கொண்டாடாமல் இப்படி ரகளைகள் செய்வது பார்பதற்கு கேவலமாக உள்ளது.