Monday, July 15, 2024
- Advertisement -
HomeசினிமாIND vs WI போட்டியில் வலிமை படத்துக்கு செய்தது போல விடாமுயற்சி அப்டேட் கேட்டு சென்ற...

IND vs WI போட்டியில் வலிமை படத்துக்கு செய்தது போல விடாமுயற்சி அப்டேட் கேட்டு சென்ற சிறுமி.. !

நடிகர் அஜித்குமாரின் 62வது படமான விடாமுயற்சியை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் எப்போதும் என தெரியவில்லை. மறுபக்கம் துணிவு படத்துடன் மோதிய விஜய் இன்னொரு படத்தை முடித்துவிட்டு அடுத்த இயக்குனருடனே இணைந்துவிட்டார்.

- Advertisement -

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ் திருமேனி இரண்டு மாதங்கள் ஸ்கிரிப்ட் பணிகளுக்கு நேரம் கேட்டு அதை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டார். ஆனால் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் அஜித்குமாரும் தன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

மே கடைசி வாரம் – ஜூன் முதல் வாரம் – ஜூலை 15 – ஆகஸ்ட் என அடுத்தடுத்து ஷூட்டிங் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இன்னும் படத்தில் யார் இருக்கிறார்கள் எங்கு ஷூட்டிங் எப்போது ஆரம்பம் என எந்த ஒரு அறிவிப்பும் கிடைக்காததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

சரியான அறிவிப்பு வராததால் வலிமை திரைப்படத்திற்கு செய்தது போலவே விடாமுயற்சிக்கும் செய்கிறார்கள் ரசிகர்கள். கொரோனா காலத்தில் செல்லும் இடத்திற்கு எல்லாம் ‘ வலிமை அப்டேட் ’ என்ற போர்ட்டை எடுத்துச் சென்றனர். சென்னை சேப்பாக்கத்தில் விளையாடிய மொயின் அலியிடம் கூட கேட்டார்கள். இதனை அஜித்குமார் தவிர்க்கச் செல்லி அறிவித்தார் ஆனால் ரசிகர்கள் கேட்கவில்லை.

- Advertisement -

தற்போது வலிமை படத்திற்கு செய்தது போலவே விடாமுயற்சிக்கும் செய்கிறார்கள். நேற்று நடந்த இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20யில் ரசிகை ஒருவர் ‘ அஜித் 62 விடாமுயற்சி அப்டேட் ’ என்ற பலகையை கையில் ஏந்திக் கொண்டிருந்தார். மீண்டும் அஜித் ரசிகர்கள் அவர்களது அலப்பறையை ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இது வலிமை அளவுக்கு மீண்டும் செய்யாமாட்டர்கள் எனத் தெரிகிறது.

தகுந்த வட்டாரங்கள் மற்றும் சினிமா ட்ராக்கார்கள் கொடுத்த செய்திகளின் படி விடாமுயற்சி திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஷூட்டிங்க்கு செல்கிறது. படத்தில் அஜித்துடன் அர்ஜுன், அர்ஜுன் தாஸ் முக்கிய வேடங்களில் வருகின்றனர். படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒன்று திரிஷா மற்றொன்று தமன்னா ஆகும். முக்கிய வில்லன் கதாபாத்திரத்திற்கு பெரிய நடிகர்களை அணுக இருக்கிறது படக்குழு.

Most Popular