சினிமா

இனிமே அஜித்தை தியேட்டரில் மட்டுமே பார்க்கவேண்டும் என்றில்லை.. இங்கேயும் பார்க்கலாம்; அஜித் ரசிகர்களுக்கு ஆயுத பூஜை பரிசு!!!

அஜித் கடந்த பத்து ஆண்டுகளாக எந்த ஒரு நேர்காணலும் கொடுத்ததில்லை. தொடர்ந்து போது நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள், படத்தின் வெற்றி விழா என்று எதிலும் கலந்து கொள்ளமாட்டார்.

இந்நிலையில் தனது சொந்த வாழ்வில் நேர்ந்த சில சம்பவங்கள் மற்றும் துணிவு திரைப்படம் பற்றி ரசிகர்களிடையே பகிர்ந்து கொள்ள ஆனந்த விகடனுக்கு அஜித் நேர்காணல் கொடுக்கவுள்ளார் என்று வெளியான தகவலால் ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல், பேட்டியும் அளிக்காமல் இருந்தார்.

அறிக்கைகள் மூலம் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தனது முழு ஆதரவையும் பங்களிப்பையும் ஒரு மனதாக அளித்துள்ளார்.

தல அஜித் பைக் மற்றும் கார் ரைடர் என்பதில் உலகளவில் அறிந்த விஷயமாகும். சில நாட்களுக்கு முன்பாக தனது உலக சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். பின்பு பயணத்தின் போது தனது ரசிகர்களுடன் பல செல்பி எடுத்துக்கொள்வார். அதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலராலும் தினமும் பேசப்படுவது வழக்கம்.

பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைதளங்களில் இவரைப்பற்றி செய்திகள் வராத நாள் இல்லை. போது மக்களுடன் எவ்வளவு மரியாதையாக நட்புணர்வுடன் இவர் நடந்துகொள்ளும் செயல்களின் வீடியோ காட்சிகளும் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு ரசிக்கப்படும்.

தொடர்ந்து தனிமையை விரும்பும் இவர் திடீரென விகடன் குழுமத்திற்கு நேர்காணல் கொடுக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் ரசிகர்கள் பட்டாளம் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top