சினிமா

அஜித் விஜய் ரெண்டு பேர்ல என்னோட சாய்ஸ் யாரு ? திரிஷா பதில்!

trisha vijay ajith

தமிழ் சினிமாவில்  20 வருடங்களாக  முடி சூடா அரசியாக விளங்கி வருபவர்  நடிகை திரிஷா . இவர்  இயக்குனர் அமீர்  இயக்கத்தில்  நடிகர் சூர்யாவின்  மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . தமிழ் தெலுங்கு என  பல மொழி திரைப்படங்களிலும்  முன்னணி கதாநாயகியாக  வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் தமிழ் சினிமாவின்  முன்னணி நட்சத்திரங்களான  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  உலக நாயகன் கமல்ஹாசன்  தளபதி விஜய்  தல அஜித்  மற்றும்  சூர்யா  உள்ளிட்ட  நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் .

தற்போது  தளபதி 67  படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடித்த  ஒப்பந்தமாகி இருக்கிறார் திரிஷா . இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . இந்தப் படத்திற்கான பூஜை  கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார்  திரிஷா . வாரிசு படத்தின்  ஆடியோ வெளியிட்டின் போது  அந்தப் படத்தின் தயாரிப்பாளர்  தில் ராஜு  விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரில்  விஜய் தான்  தமிழ் திரையுலகின்  பெரிய நட்சத்திரம் என்று கருத்து தெரிவித்திருந்தார்  இதை இணையதளத்தில் பெரும் சர்ச்சையானது .

Advertisement

இந்நிலையில் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த திரிஷாவிடம்  அஜித் மற்றும் விஜய்  இருவரில்  மிகப்பெரிய  நட்சத்திரம் யார்  தல  இல்லை  தளபதியா ?  என்று அவரிடம் கேட்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த திரிஷா  அஜித் மற்றும் விஜய் இருவருமே  தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் தான். இருவருமே தமிழ் சினிமாவின்  மிகப்பெரிய நட்சத்திரங்கள் என்று குறிப்பிட்ட அவர் ,  இருவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பது முடியாத காரியம் என்று கூறினார் .

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி அவர்  பத்திரிக்கைகள் மற்றும்  ரசிகர்கள் கூறுவதைப் போல்  பாக்ஸ் ஆபிஸ்  கலெக்ஷனை வைத்து  ஒரு  பெரிய நட்சத்திரத்தை  முடிவு செய்ய முடியாது  என்றும் தெரிவித்தார் . ஒரு நடிகரை அவருடைய கிளாஸ் தான் முடிவு செய்ய வேண்டும் . பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்கள் அல்ல என்றும் கூறினார் . அந்த வகையில் அஜித் மற்றும் விஜய் இருவருமே  கிளாஸ் மற்றும்  டைல்ஸான நடிகர்கள் . இருவருமே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள்  என்று கூறினார் .

Advertisement

இந்நிலையில் அஜித்  அடுத்து  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள  தல 62  படத்திற்கு  த்ரிஷா தான்  கதாநாயகியாக  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்திகள்  பரவி வந்தன . இந்நிலையில் அந்த செய்திகள் ஆனவை  வதந்திகளாக இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top