Monday, April 29, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவீடியோ- பிகில் விஜய் போல் கால்பந்து விளையாடும் அஜித் மகன்!

வீடியோ- பிகில் விஜய் போல் கால்பந்து விளையாடும் அஜித் மகன்!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் என்றால் அது அஜித் தான். நடிகர் அஜித் திரைப்படங்களின் நடிப்பதை ஒரு பார்ட் டைம் ஜாப்பாக வைத்திருந்தாலும் பைக் ஓட்டுவது சமையல் செய்வது போட்டோ எடுப்பது துப்பாக்கி சுடுவது என பல விஷயங்களில் நடிகர் அஜித் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் புலிக்குப் பிறந்தது பூனை ஆகாது என்பது போல் நடிகர் அஜித்தின் மகன் அவரைப்போலவே பல்வேறு திறமை வாய்ந்த நபராக திகழ்கிறார். நடிகர் அஜித்தின் மகனுக்கு தற்போது இருந்து கால்பந்து மீது தனி கவனம் இருக்கிறது .

தன் மகனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக பல்வேறு சர்வதேச போட்டிகளுக்கு நடிகர் அஜித் தனது மகனை பார்க்க வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது சென்னையில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் தற்போது தினந்தோறும் பயிற்சி செய்து வருகிறார்.

- Advertisement -

இதில் நேற்று நடந்த பயிற்சியில் நடிகர் அஜித்தின் மகன் அபாரமாக விளையாடி கோலை போட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் பிகில் என்ற திரைப்படத்தில் கால்பந்து வீரராக நடிப்பார்.

- Advertisement -

அதில் மெஸ்ஸி ரொனால்டோவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பெரிய கால்பந்து வீரர் போல் அவரை காட்டி இருப்பார்கள். மேலும் அந்த ஏரியா சிறுவர்கள் கூட நான் பிகில் மாதிரி வர வேண்டும் என்று கூறுவார்கள்.

தற்போது அஜித்தின் மகன் கால்பந்து ஆடி கோல் போட்டது. பிகில் படத்தில் விஜயை எப்படி காட்டினார்களோ அதே போல் அஜித் மகன் செய்வதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.விஜய் ரீலில் செய்ததை ரியல் லைப்பில் அஜித்தின் மகன் செய்வது இரண்டு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.

அஜித்தின் மகனுக்கு நடிகர் விஜயின் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். கல்வி முக்கியமாக இருந்தாலும் இது போன்ற விளையாட்டிலும் சிறுவயதிலிருந்தே நாம் பயிற்சி பெற்றால் பெரிய அளவில் சாதிக்க முடியும். அந்த வகையில் அஜித்தின் மகனும் சாதிப்பார் என்று நாம் வாழ்த்துவோம்.

Most Popular