Monday, October 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகைவிடப்படும் நிலையில் அஜித்தின் விடாமுயற்சி.. போனி கபூர் நினைத்தால் காப்பாற்றலாம்.. செய்வாரா ?

கைவிடப்படும் நிலையில் அஜித்தின் விடாமுயற்சி.. போனி கபூர் நினைத்தால் காப்பாற்றலாம்.. செய்வாரா ?

நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்திற்கு முன்பே தன் 62வது படத்தை உறுதி செய்துவிட்டார். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருந்த அஜித், வேறு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் படத்தை கைவிட்டார். அவருக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி அவ்விடத்தில் வந்து சேர்ந்தார்.

- Advertisement -

லைகா தயாரிப்பில் கடந்த ஆண்டு மே மாதம் விடாமுயற்சி எனும் தலைப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு வெகு மாதங்கள் கழித்து அஜர்பைஜானில் ஷூட்டிங் துவங்கப்பட்டது. கொண்டாடும் அளவுக்கு அப்டேட் வரவில்லை என்றாலும் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் உகைப்படங்கள் வெளியாகியது.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகின்றனர். தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்த ஷூட்டிங் தற்போது நிறுத்து வைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் விடாமுயற்சி படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் தான்.

- Advertisement -

லைகா நிறுவனம் பொருளாதார சூழலில் மிகவும் கவலைக் கிடமாக உள்ளது. தொடர்ந்து தோல்விப் படங்களாக தந்ததால் இந்த நிலை எனக் கூறுகின்றனர். இதனால் விடாமுயற்சி படத்தைத் தொடர முடியாத நிலையில் உள்ளது. சமூக வலைதள வட்டாரங்களில் விடாமுயற்சி படமே கைவிடப்படும் என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் பாதி ஷூட்டிங் முடிந்த திரைப்படம் அதுவும் அஜித்தின் படம் என்பதால் நிச்சயம் அதற்க்கு வாய்ப்பே இல்லை. ஒரு வேளை லைகா நிறுவனத்தால் தொடர் முடியவே இல்லை என்றால், வேறு ஒரு தயாரிப்பாளர் அதனை வாங்கி விடுவார். தற்போது அது போன்ற ஒரு முடிவு தான் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களில் அஜித்துடன் பயணித்த போனி கபூர், விடாமுயற்சி படத்தைத் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் , பொறுத்திருந்து பார்க்கலாம். விடாமுயற்சி ஒரு பக்கம் இருக்க அஜித் 63வது படத்திற்கே சென்றுவிட்டார்.

மித்ரி மூவிஸ் தயாரிப்பில் அஜித் முதல் முறையாக ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் படத்தின் போஸ்டர் வெளியானது. ‘ குட் பேட் அக்லி ’ என படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Most Popular