Saturday, October 5, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஅஜித்துக்கும் மகிழ் திருமேனிக்கும் தகராறா..? ‍விடாமுயற்சி படத்துக்கு ஒரு தீர்வே இல்லை.. !

அஜித்துக்கும் மகிழ் திருமேனிக்கும் தகராறா..? ‍விடாமுயற்சி படத்துக்கு ஒரு தீர்வே இல்லை.. !

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தொடர்ந்து சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டே வருகிறது. இதற்கு ஒரு முடிவே இல்லை போல. ஒரு நாள் நல்ல செய்தி வந்தால் மறு தினமே அதற்க்கு மாறான ஓர் செய்து படக்குழுவிடம் இருந்து வருகிறது. இதனால் படத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் லைகாவுக்குப் பெரிய தலை வலி.

- Advertisement -

அறிவிப்பு வந்து 5 மாதங்கள் கழித்து அக்டோபர் மாதம் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டது. நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது லைகா நிறுவனம் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ள, படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால அஜித்தும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் குட் பேட் அல்லி படத்தை துவங்கிவிட்டார்.

குட் பேட் அல்லி படத்தின் முதல் அட்டவணை ஹைதராபாத்தில் முடிந்துள்ளது. அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தை ஒரு மாதத்தில் முடித்துவிட்டு மீண்டும் ஆதிக்குடன் இணைவதாக திட்டமிட்டார். லைகா நிறுவனமும் எப்படியாவது விடாமுயற்சியை இந்த முறை முடித்துவிட வேண்டுமென உறுதியாக உள்ளனர்.

- Advertisement -

படக்குழு மீண்டும் அஜர்பைஜான் சென்று 20 நாட்கள் அங்கு ஷூட்டிங் மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே மகிழ் திருமேனி & கோ அங்கு சென்றுவிட்டது, இன்னும் இரு தினங்களில் அஜித்தும் புறப்பட்டுவிடுவார். எல்லாம் சுமூகமாக போகும் போலீஸ் என எதிர்பார்த்த போது மற்றொருவர் பெரிய சிக்கல் வந்துள்ளது.

- Advertisement -

அதாவது அஜித் அஜர்பைஜான் ஷூட்டிங்கில் முழுசாக கலந்துக் கொள்ள விருப்படவில்லை. அவர் கடைசி க்ளைமாக்ஸ் காட்சிகளை சென்னையில் செட் போட்டு எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மகிழ் திருமேனிக்கோ அதில் உடன்பாடு இல்லை. மேலும் அஜர்பைஜான் போன்ற காட்சிகளை சென்னையில் செட் போட்டு எடுப்பது கூடுதல் சிரமம்.

அஜித் தன் வசதிக்கு ஏற்பவாரு கேட்பது சற்றும் சரியில்லை. இதனால் அவருக்கும் இயக்குனர் மகிழ் திருமேனிக்கும் இடையே மனஸ்தாபம் வந்துள்ளது. அஜித் ஜூலை முதல் வாரத்தில் ஷூட்டிங்கில் இருந்து சென்னை திரும்பி வரவுள்ளார். இதனால் இப்படத்துக்கு ஒரு முடிவு இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது.

லைகா நிறுவனம் இந்தப் படத்தை எப்படியாவது விரைந்து முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அஜித்தின் இது போன்ற காரியங்களால் படம் தேங்கிக் கொண்டே தான் இருக்கும் போல.

Most Popular