நடிகர் அஜித்குமார் தற்போது தன் 62வது படமான குட் பேட் அக்லியில் நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு அடுத்து அஜித்துடன் கைக் கோர்த்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் நேர்கொண்ட பார்வை படத்தின் போதே அஜித்திடம் கதைச் சொல்லி ஓகே செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் இந்த வாரம் ஷூட்டிங் துவங்கியது. முதல் இரு தினங்களில் சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளனர். உடனே தேர்தல் வந்ததால் சிறிய விடுமுறைக்கு பின் ஷூட்டிங் தொடர்ந்தது. ஜூன் 7 வரை இந்த அட்டவணை நடக்கவுள்ளது. இதன் பின்னர் அஜித் இப்படத்தில் இருந்து விலகி தன் முந்தைய படத்திற்கு செல்கிறார்.
துணிவு படத்திற்குப் பிறகு அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி படத்தைத் ஆரம்பித்தனர். இப்படம் லைகா நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அஜித் அடுத்தப் படத்துக்கு நகர்ந்தார். மே மாதமே முடிக்க வேண்டிய விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் பாதியில் இருப்பதால் லைகா நிறுவனத்தின் மேல் அஜித்துக்கு பெரிய வருத்தம்.
இதனால் லைகா நிறுவனம் எப்படியாவது விடாமுயற்சி படத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கின்றனர். ஜூன் 7க்குப் பிறகு அஜித் விடாமுயற்சி படத்துக்கு அவரது தேதிகளைக் கொடுத்துள்ளார். இதைச் சரியாக பயன்படுத்தி மீதம் இருக்கும் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளது லைகா. விடாமுயற்சி படத்தை முடித்த பின்னரே அஜித் மறுபடியும் குட் பேட் அக்லி படத்திற்குச் செல்கிறார்.
விடாமுயற்சி திரைப்படம் 65% பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் காட்சிகளை ஒன்றரை மாதத்தில் தொடந்து விரைந்து எடுக்கவுள்ளனர். டிசம்பர் மாதம் போல ரீலீஸ் செய்யவும் படக்குழு நினைக்கிறது. வேட்டையன் படத்திற்க்கு ஏற்கனவே ரீலீஸ் தேதி அறிவித்ததால் இதற்குப் பின்னர் தான் விடாமுயற்சி வரும் போல.
அஜித், அர்ஜுன், ஆரவ், த்ரிஷா, ரெஜினா என பெரிய நட்சத்திர படையுடன் சிறப்பான ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. அஜித் ரசிகர்களின் காத்திருப்புக்கு தரமான படமாக நிச்சயம் வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.