சினிமா

சிவா கார்த்திகேயனின் புதிய படத்திற்கான ஓடிடி உரிமைகளை வாங்கியது அமேசான் பிரைம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவா கார்த்திகேயன். தனுஷ் நடிப்பில்  வெளியான மூன்று திரைப்படத்தின் மூலம்  சின்னத்திரையில் இருந்து  சினிமாவிற்கு அறிமுகமானவர் இவர். தனுஷ்  தயாரிப்பில் வெளிவந்த  எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து  இன்று தமிழ் சினிமாவில்  வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர். இவரது நடிப்பில் வெளிவந்த  வருத்தப்படாத வாலிபர் சங்கம்  கேடி பில்லா கில்லாடி ரங்கா  டாக்டர்  மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. சிவகார்த்திகேயன் என்றாலே  மினிமம் கேரண்டி என்னும் அளவிற்கு  கமர்சியல் வெற்றி பெற்ற  கதாநாயகனாக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த  பிரண்ட்ஸ் திரைப்படம்  எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு  ஆகிய இரு மொழிகளிலும் தோல்வியை தழுவியது . இதனால் தனது அடுத்த படங்களில் வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இவர். தற்போது இவரது நடிப்பில் மாவீரன் மற்றும்  அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்கள்  வெளிவர  இருக்கின்றன  இவை தவிர ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில்  புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவா கார்த்திகேயன்.

Advertisement

யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா என்ற  வெற்றி திரைப்படத்தை இயக்கியவர்  மடோனா அஸ்வின். இவரது இயக்கத்தில் உருவாகி வரும்  மாவீரன் என்ற திரைப்படத்தில்  சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்  இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக  இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருக்கிறார் . இவர் ஒரு மான் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவீரன் திரைப்படத்திற்கு   பாரதி  சங்கர் என்பவர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை சாந்தி டாக்கிஸ் இன்னும் நிறுவனத்தின் சார்பாக அருண் விஸ்வா தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கான படபிடிப்பு வேலைகள் மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு  ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான மாவீரன் திரைப்படத்தின்  ரீமேக் ஆக இந்த திரைப்படம் இருக்குமா என்ற  ஒரு எதிர்பார்ப்பும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில் இத்தனை படத்தின் ஓடிடி உரிமைகளை  அமேசான் பிரைம் நிறுவனம்  வாங்கி இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பை எந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ  இணையதளத்தின் மூலமாக வெளியிட்டு இருக்கிறது. மாவீரன் படம் வெளியாகி  45 நாட்கள் கழித்து  அமேசான் பிரைம் மூலமாக  இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Advertisement

மிகப்பெரிய ஒரு தொகைக்கு  இத்திரைப்படமாகப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர்களும்  சூப்பர் ஸ்டாரின் மாவீரன் படத்தை  பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. ஈசன் காரணமாக இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது . படத்திற்கான ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ள நிலையில்  அவற்றிற்கான  அறிவிப்புகளும் முப்பது விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top