சினிமா

‘ராக்கி ஹீரோவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அனிருத்” – மிரட்டலான போஸ்டர் !

தமிழ் சினிமாவில் அறிமுக நடிகராக இருந்து தனது முதல் இரண்டு படங்களின் வெற்றியால் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் வசந்த ரவி. இவர் இயக்குனர் ராமின் தரமணி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி என்னும் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்தத் திரைப்படம் மூவி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் ஒரு மருத்துவராக இருந்து அதன் பின்பு நடிகர் ஆனவர்.

தற்போது இவர் புது முக இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் அந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது மும்முறமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ராக்ஸ்டார் அனிருத் இத்திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

Advertisement

இந்தத் திரைப்படத்திற்கு அஸ்வின்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது இந்தத் திரைப்படம் ஆனது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் கதையாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தினை தருண் தேஜா என்ற அறிமுகம் இயக்குனர் இயக்கியிருக்கிறார். இவர் பல குறும்படங்களை எடுத்தவர். இதுதான் இவர் இயக்கம் முதல் திரைப்படமாகும் . எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலேயே நடித்து வரும் வசந்த ரவி இத்திரைப்படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தையே தேர்வு செய்திருக்கிறார். அதன்படி இந்தத் திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லராக உருவாக்கப்பட்டிருக்கிறத.

இந்தத் திரைப்படத்தில் வசந்த் ரவியுடன் விமலா ராமன் முரளிதரன் சரஸ்மேனன் உதய்தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் நடித்துள்ளனர் . சைக்காலஜிக்கல் திரில்லர் ஆன இந்த திரைப்படத்தில் யூடியூபர்களின் குழு 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கெட்ட ஆவி ஒன்றினை தவறுதலாக தூண்டி விட்டு விடுகின்றனர். அதனால ஏற்படும் விளைவுகளைப் பற்றிய கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரவீன் டேனியல் என்பவர் இணை தயாரிப்பாளராக இருக்கிறார். பிவிஎஸ்என்.பிரசாத் என்பவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற நிறுவனத்தின் சார்பாக இந்த திரைப்படத்தின் தயாரித்திருக்கிறார்

Advertisement

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன விரைவிலேயே திரைப்படத்தைப் பற்றிய வெளியீட்டிற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் திரைப்பட வெளியீட்டிற்கு முன்பாக ப்ரோமோஷன் பணிகளை படக்குழுவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது . இதனை தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டார். இந்த போஸ்டரில் வசந்த் ரவி வித்தியாசமான சைக்கோ கதாபாத்திரத்தில் இருப்பது போன்று ஆக்ரோஷமாக போஸ்டரில் காணப்படுகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top