Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஎன் வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கு அஜித் தான் காரணம்- ஆதிக் ரவிச்சந்திரன்

என் வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கு அஜித் தான் காரணம்- ஆதிக் ரவிச்சந்திரன்

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகர் அஜித் ஒரு காரணம் என்று அந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். திரிஷா இல்லனா நயன்தாரா இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களை எடுத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

- Advertisement -

இவர் ஆபாச படங்களை எடுத்து புகழ் பெற்றார்.இந்த நிலையில் இனி தான் ஆபாச படங்களை எடுக்கப் போவதில்லை மக்களுக்கு பிடித்த திரைப்படங்களை தான் எடுக்கப் போகிறேன் என்று ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார்.

இதற்கு பின் அவர் எடுத்த மார்க் ஆண்டனி  திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து ஏழு படங்களில் தோல்வியை தழுவிய நடிகர் விஷாலுக்கு இது மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

- Advertisement -

இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தமக்கு ஒரு இயக்குனராக நல்ல வரலாறு இல்லை. இருப்பினும் 50 முதல் 55 கோடி ரூபாய் கொடுத்து இந்த படத்தை எடுக்க உதவிய தயாரிப்பாளருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

- Advertisement -

விஷால் சாருக்கும் எனக்கும் உள்ள உறவு அண்ணன் தம்பி போன்றது. சுமார் 9 ஆண்டுகளாக எனக்கு விஷால் சாரை தெரியும் அவருக்கு நான் இந்த கதையை கூறியவுடன் அவர் என்னை வெகுவாக பாராட்டினார். இந்த படத்தை நிச்சயம் செய்யலாம் என்று அவர்தான் நம்பிக்கை கொடுத்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று நடிகர் எஸ் ஜே சூர்யா மாலை ஆறு மணிக்கு ஷூட்டிங் தொடங்கி அதிகாலை ஆறு மணி வரை ஷூட்டிங் செல்லும் அப்போது நான் சோர்வடைந்து விடுவேன். ஆனால் எஸ்.ஜே சூர்யா வாங்க சார் என்று என்னை உற்சாகப்படுத்துவார்.

எஸ் ஜே சூர்யா சார் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததால் தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் பிறகு என்னுடைய வாழ்க்கையில் நான் வெற்றி அடைந்ததற்கு நடிகர் அஜித் தான் காரணம். நேர்கொண்ட பார்வை ஷூட்டிங் என்பது அவர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். ஆபாச படங்களிலிருந்து மாறி பொழுதுபோக்கு திரைப்படங்களை எடுக்க அவர்தான் கூறினார்.

நடிகர் அஜித் கொடுத்த வார்த்தையால்தான் எனக்கு நம்பிக்கை வந்து இந்த படத்தை நான் எடுத்தேன். இதனால் என்னுடைய வெற்றிக்கு என் தந்தை தாய்க்கு பிறகு அஜித்தும் ஒரு காரணம் என்று ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார்.

Most Popular