Wednesday, May 8, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஅவஞ்சர்ஸ் எண்ட் கேம் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ள அவதார் 2… ! எவ்வளவு வசூல்...

அவஞ்சர்ஸ் எண்ட் கேம் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ள அவதார் 2… ! எவ்வளவு வசூல் தெரியுமா ?

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகெங்கிலும் பல சாதனைகளைப் புரிந்தது அவதார் திரைப்படம் . கடந்த டிசம்பர் மாதம் இதன் இரண்டாம் பாகமான அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படம் வெளியானது .

- Advertisement -

இதன் முதல் பாகமான அவதார் 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரையும் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது . மேலும் இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது . அதில் காட்டப்பட்டிருந்த பண்டோரா உலகம் மற்றும் நவீன மக்கள் அதன் கிராபிக் காட்சிகள் என பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது .

அப்போதே இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்தின் அடுத்த அடுத்த பாகங்களை தொடர்ந்து இயக்குவேன் என கூறி இருந்தார். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் 2017 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டன . இதன் பெரும்பாலான காட்சிகள் நீருக்கு அடியில் படமாக்கப்பட்டதால் அதன் படப்பிடிப்புகள் நிறைவடைய படக்குழுவினருக்கு சில காலங்கள் தேவைப்பட்டது . இதனை அடுத்து அவதாரின் இரண்டாம் பாகமான அவதார் த வே ஆஃப் வாட்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக்கியது .

- Advertisement -

அவதாரின் முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது . கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியானது . இந்தத் திரைப்படம் ஆனது அவதாரின் முதல் பாகத்தை போன்று மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும் உலகெங்கிலும் வசூலில் சாதனை நிகழ்த்தி வருகிறது . உலகெங்கிலும் 160 மொழிகளில் வெளியாகி உள்ள இந்த திரைப்படமானது தற்போது வரை 1.928 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்திருக்கிறது .

- Advertisement -

உலக அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் இந்த திரைப்படமானது வசூலில் இதற்கு முன் வந்த ஆங்கில படங்களின் வசூல் சாதனையை முறியடித்து இருக்கிறது . அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் நெட் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் 368 கோடிகளையும் கிராஸ் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 475 கோடிகளையும் வசூல் செய்து அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்திருக்கிறது .அவெஞ்சர்ஸ்  எண்டு கேம் திரைப்படமானது நெட் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனாக 367 கோடியும் கிராஸ் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனாக 438 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது . இந்த சாதனையை அவதார் திரைப்படம் முறியடித்து வரலாறு படைத்திருக்கிறது .

Most Popular