நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இந்த படத்தின் ஒரு சில காட்சியை மட்டும் படக்குழு வெளியிட்டது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிராபிக்ஸ் பிரமாண்டமாக இருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர். இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்த கருத்துகளை தற்போது காண்போம்.
அயலான் படத்தின் டீசர் டிரைலர் தற்போது எதுவும் ரிலீஸ் ஆகாது. மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகுதான் அயலான் படம் தொடர்பான அடுத்த அப்டேட் வரும். ஏனென்றால் இது மாவீரனை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம்.
அவெஞ்சர்ஸ் அவதார் போன்ற படங்களில் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட Phantom நிறுவனத்தில் சுமார் 120 பேர் அயலான் படத்திற்காக பணிபுரிந்து வருகிறார்கள். இரவு பகலாக மூன்று ஷிப்ட் மூலம் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
கிராபிக்ஸ் பணிகள் அக்டோபர் மாதம் முடிவடைந்து விடும் என நினைக்கிறேன். மற்ற பணிகள் எல்லாம் ஏற்கனவே முடிவடைந்து விட்டதால் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய எந்த பிரச்சினையும் இருக்காது.
இந்த படத்தை மோஷன் கேப்சர் மூலம் நாங்கள் எடுத்திருக்கிறோம். இதற்காக சிறப்பு ஆடை ஒன்றை அணிய வேண்டியது இருக்கிறது. இதில் செலவு மட்டும் 40 லட்சம் ரூபாய் ஆனது லாக்டவுன் போடுவதற்கு முன்பு இந்த ஆடைகள் எல்லாம் நாங்கள் வாங்கி விட்டோம்.
கொரோனா காலத்தில் அப்படியே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது தற்போது அதில் பல அப்டேட்டுகளை செய்து படத்தை மீண்டும் தொடங்கினோம். ரசிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த படைப்பை வழங்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கிறது.