சினிமா

தளபதி 67’இல் முக்கிய கதாபாத்திரத்தை தட்டி தூக்கிய பிக் பாஸ் ஜனனி!

தளபதி விஜயின் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் தளபதி 67 படத்திற்கான வேலைகள் தயாராகி விட்டது . தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவரது அடுத்த படம் லோகேஷ் உடன் தான் என ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது .

வாரிசு படத்தின் வெளியீட்டிற்காக தான் தளபதி 67 படத்தின் மொத்த பட குழுவின் காத்திருந்தது . தற்போது வாரிசு படம் வெளியானதை அடுத்து தளபதி 67 படத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன . தளபதி 67 படமானது நோக்கியின் யுனிவர்சல் ஸ்டைலில் தயாராக போகும் ஒரு படமாகும் .

Advertisement

இந்தப் படமானது ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருப்பதாக தளபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மேலும் இந்த படத்தில் தளபதி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்ஸ்டர் ஆக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன . இந்நிலையில் படத்தினை பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

அதன்படி தளபதி 67 படத்தில் தளபதிக்கு மகளாக நடிக்க பிக் பாஸ் சீசன் ஆறு மூலம் புகழ் பெற்ற ஜனனி நடிக்க இருக்கிறார் என்பதுதான். பிக் பாஸ் சீசன் 6 வெளியேற்றப்பட்டவர் ஜனனி . தற்போது இவருக்கு தளபதியின் மகளாக நடிப்பதற்கு லோகேஷ் கனகராஜன் படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது . இந்தப் படத்தில் மகள் கதாபாத்திரம் ஒரு முக்கியமான அம்சமாக அமையும் என்றும் அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் திரைக்கதையில் சில திருப்பங்கள் இருக்கலாம் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

Advertisement

மேலும் கன்னட சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ரக்ஷித் செட்டியும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . பாலிவுட் பிரபலமான சஞ்சய்தத் இந்தப் படத்தில் முக்கியமான வில்லனாக நடிக்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே . மேலும் விஜயின் ஃபேவரட் ஜோடியான திரிஷா தான் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் . மற்ற நடிகர் நடிகையர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தினை பற்றி அப்டேட்டுகள் வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top