Entertainment

ஆஹா… வேளியானது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் லிஸ்ட்! வீடே களைகட்ட போகுது..

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளது. நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியானது வழக்கம்போல விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. தினமும் ஒருமணி நேரம் தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டார் செயலின் மூலம் 23 4 மணி நேரம் ஒளிபரப்பையும் காணலாம்.

மேலும் பிக் பாஸ் வீடு என்றாலே ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு புதுமை இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் வீட்டின் அமைப்பு ஏதேனும் ஒரு கருத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில மாதங்களில் ஒளிபரப்பாக உள்ளது என தெரியவந்தால் யார் யார் பங்கேற்க உள்ளார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறும். வழக்கமாக திரைப்படம் அல்லது வேறு ஏதேனும் துறையின் பிரபலங்கள் பங்கேற்பர். ஆனால் இம்முறை சாதாரண மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்பதை ப்ரோமோ மூலம் அறிவித்திருந்தனர்.

இம்முறை கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களில் டிஜே அருணாச்சலம் இருக்கிறார் என தகவல்கள் வந்துள்ளது. இவர் பல தனியிசை ஆல்பங்களை பாடி ஹிட் அடித்துள்ளது. அசுரன் படத்தில் தனுஷிற்கு மகனாக நடித்தவர் இவர்.

Advertisement

நடிகை மனிஷா யாதவ் இவர் வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், குப்பை கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். சூப்பர் சிங்கரில் பாடிய ராஜலட்சுமி செந்தில்கணேசன், மற்றும் விஜய் டிவி ,கலர்ஸ் தமிழ் , ஜீ தமிழ் போன்ற சேனல்களில் கதாநாயகியாக நடித்த சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி கலந்து கொள்கிறார்.

குக் வித் கோமாளி பிரபலமான அஸ்வின் குமார் இந்த வரிசையில் இருக்கிறார். இவர் தற்போது பல ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார். மேலும் ஜீ தமிழ் சேனலில் சத்யா எனும் நாடகத்தில் நடித்த சின்னத்திரை நடிகை ஆயிஷா ஜீனத் பிவி ஆகியோரும் உள்ளே செல்கின்றனர்.

விஜய் டிவியில் ஜோடி, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகளில் நடனமாடிய நடன இயக்குனர் மணிச்சந்திரா மற்றும் மாடலிங் துறையில் வலம் வரும் மாடல் முகேஷ் ரவி ஆகியோர் உள்ளே செல்ல இருப்பதாக பல முக்கியமான வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top