Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாவெளியான சில மணி நேரத்தில் 10 லட்சம் பேர் கண்ட பொம்மை நாயகி - டிரைலா...

வெளியான சில மணி நேரத்தில் 10 லட்சம் பேர் கண்ட பொம்மை நாயகி – டிரைலா எப்படி இருக்கு?

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு பல திரைப்படங்களில் இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் மண்டேலா போன்ற திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் . தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் பொம்மை நாயகி .

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் நீலம் ப்ரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ஷான் இயக்குகிறார். யோகி பாபு உடன் அன்புதுரை ஹரி கிருஷ்ணன் ஜி எம் குமார் சுபத்ரா மற்றும் ஸ்ரீ மதியாகியோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைத்திருக்கிறார். தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து வரும் நீலம் ப்ரொடக்ஷனில் மற்றும் ஒரு தரமான படைப்பாக வந்திருக்கிறது பொம்மை நாயகி .

வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லரானது நேற்று வெளியிடப்பட்டது வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 1.6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போது இது ஒரு தந்தை மற்றும் மகளுக்கிடையேயான பாசப்பிணைப்பை காட்டும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது . மேலும் இத்திரைப்படம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் பேசி இருப்பது ட்ரெய்லரின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது

- Advertisement -

சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் அதிகாரம் இருப்பவனுக்கு ஒரு நீதி சாமானியனுக்கு ஒரு நீதியும் என இருக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சாதி இருக்கும் ஒரு படமாக இது தெரிகிறது . சமீபத்தில் பா ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களுமே சமூகத்தில் அண்டியிருக்கும் அநீதிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன அதேபோன்று மற்றும் ஒரு சிறந்த படைப்பாக உருவாகி இருக்கிறது பொம்மை நாயகி .

- Advertisement -

இத்திரைப்படம் பற்றிய அறிவிப்பு கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியானது அதனைத் தொடர்ந்து படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது . கடந்த நவம்பர் மாதம் இத்திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்தது. கடந்த இரண்டு மாதங்களாக போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்த நிலையில் படமானது பிப்ரவரி மூன்றாம் தேதி வெளியிடப்படும் என பட குழு அறிவித்து இருக்கிறது. பா ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில் சான் இயக்கத்தில் ரசிகர்கள் மற்றும் ஒரு தரமான படைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் . அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே ட்ரெய்லரும் அமைந்து நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது .

Most Popular