சினிமா

லட்சுமி குறும்படம் நியாபகம் இருக்கா? இப்போ புதுசா ஒன்னு புர்கானு இறக்கி இருக்காரு!

2017 ஆம் ஆண்டு லட்சுமி என்ற ஒரு குறும்படம் மூலம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர் தான் சர்ஜுன். தனது குறும்படம் மூலம் பெரும் விவாதத்தையே சமூக வலைத்தளத்தில் ஏற்படுத்தியவர். லட்சுமி என்ற பெண் மணவாழ்க்கையில் ஒரு பொம்மை போல் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரு இளைஞன் அந்த பெண்ணை கவரும் வகையில் நடந்து கொண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று லட்சுமி இடம் உல்லாசமாக இருப்பார்.

Advertisement

அதன் பிறகு நாம் தவறு செய்து விட்டோம் என்று நினைக்கும் லட்சுமி பேருந்து விட்டு ரயிலில் பயணம் செய்ய தொடங்கி விடுவார். இந்த குறும்படம் பல சர்ச்சைகளை அப்போது ஏற்படுத்தியது. பெண்களை மிகவும் இழிவாக காட்டியதாக இந்த இயக்குனர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எனினும் அதன் பிறகு அவர் நயன்தாராவை வைத்து ஐரா என்ற படத்தை இயக்கினார் .ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

தற்போது சர்ஜுன் புர்கா என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் கலையரசன், மிருணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் தற்போது ஆகா ஓடிடி தனத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதில் மிருணா தனது கணவனை இழந்த நிலையில் வீட்டில் தனியாக இருக்கிறார். அப்போது வீட்டிற்குள் எதிர்பாராத விதத்தில் வரும் கலையரசன் மிர்ணாவிடம் பேச்சு கொடுக்கிறார்.

Advertisement

அப்போது மிருனா புர்கா அணிந்து கலையரசனுடன் பேசுகிறார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இதில் பெண்கள் உரிமை குறித்து படம் பேசுகிறது. கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஏன் இவ்வளவு சோகத்தை அனுபவித்து அடுத்த வாழ்க்கைக்கு தயாராக காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மனைவி இழந்த கணவன் மட்டும் அடுத்த வாழ்க்கைக்கு உடனடியாக தயாராக விடுகிறார் என்பது குறித்து எல்லாம் படம் பேசுகிறது.

எனினும் இந்த படம் எடுக்கப்பட்ட விதம் பேசப்பட்ட கருத்து அனைத்தும் பெரிய சர்ச்சைக்கு தான் வழி வகுக்குறது. கணவனை இழந்த பெண்ணுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் மதத்தில் அனுமதியும், நெறிமுறைகளும் உள்ள நிலையில் இயக்குனர் அதனை தவறாக படமாக்கி இருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top