கோட் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறது. தற்போது வெங்கட் பிரபு நாயகன் விஜய்யை வைத்து இளமைக் காட்சிகள் உருவாக்கும் பணிக்காக அமெரிக்காவில் பிரபல ஸ்டுடியோவில் பணிபுரிந்து வருகிறார். இதற்கு சில காட்சிகள் ஷூட் செய்ய வேண்டியுள்ளதால் தளபதி விஜய் இரு தினங்களுக்காக புறப்பட்டுள்ளார்.
பெரிய பட்டாளம் கொண்ட கோட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. எப்படியாவது படத்தை சூப்பர் ஹிட்டாக்க வெங்கட் பிரபுவும் அயராது உழைத்து வருகிறார். ஷூட்டிங் பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் நிலையில் இனி முழுவதும் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் புரொமோஷன் பணிகள் தான்.
இந்தப் படத்தில் டீ ஏஜிங் (இலமையாக்கும் தொழில்நுட்பம்) போலவே மற்றொரு பிரபல தொழில்நுட்பத்தையும் வெங்கட் பிரபு & கோ பயன்படுத்தியுள்ளது, அதுதான் ஏ.ஐ. இதை வைத்து ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட சிலர் மறைந்த கலைஞர்களை மீண்டும் சினிமாவுக்குள் அழைத்து வந்துள்ளார்கள். அதே வழியில் கோட் படக்குழுவும் சென்றுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் கேப்டன் விஜயகாந்த் மறைந்ததற்குப் பிறகு ஏ.ஐ மூலம் அவரை மீண்டும் திரைக்கு கொண்டு வர முடிவெடுத்து விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் அணுகினார். விஜயகாந்த் குடும்பத்தினரும் அதற்க்கு சம்மதித்து, எடிட் செய்த காட்சிகளைக் காட்டியப் பிறகு தான் படத்தில் சேர்க்க வேண்டுமென கண்டிசன் போட்டனர். அதற்கேற்ப பணிகளை முடித்துவிட்டு காட்சிகளை பிரேமலதாவிடம் அண்மையில் காட்டியுள்ளார் வெங்கட் பிரபு.
எடிட் செய்த காட்சிகளைப் பார்த்த விஜயகாந்த் குடும்பத்தினர் திருப்தியடைந்தனர். படத்தில் விஜயகாந்த் அவர்கள் 2 நிமிடங்கள் வருகிறார். க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்னர் ஒன்றரை நிமிடம் முக்கிய வசனத்தை தொடர்ந்து பேசுகிறார். படத்தின் முக்கிய காட்சியாக பார்வையாளர்கள் மனதில் ஒட்டும் வகையில் செதுக்கியுள்ளார் வெங்கட் பிரபு. எல்லாம் சரியாக போனால் நிச்சயம் கோட் படம் விஜய்யின் கேரியரில் மிகச் சிறந்த படமாக அமையும்.