Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு படத்தின் கதாபாத்திரங்களை பற்றிய புதிய அப்டேட் - விபரங்கள் உள்ளே!

துணிவு படத்தின் கதாபாத்திரங்களை பற்றிய புதிய அப்டேட் – விபரங்கள் உள்ளே!

தல அஜித் குமாரின் நடிப்பில் எச் வினோத் அவர்களின் இயக்கத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது துணிவு . இப்படத்தைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது கசிந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீடு பற்றிய அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்ற நிலையில் இப்படத்தில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரங்களை பற்றிய வெளியிட்டை இப்படத்தில் இணை தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்டுடியோஸ் இன்று வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இந்த பொங்கலுக்கு அஜித்தின் துணிவு மற்றும் தளபதி விஜய் அவர்களின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் மோத உள்ளன . வாரிசு படத்தின் ஆடியோவானது கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் துணிவு படத்தின் ஆடியோ மற்றும் டீசருக்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . படக்குழுவினர் இந்த படத்தைப் பற்றிய செய்திகளை சஸ்பென்ஸ் ஆகவே வைத்துள்ளது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது .

இந்நிலையில் திரைப்படத்தைப் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பினை படக்குழு என்று வெளியிட்டுள்ளது . துணிவு படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்டுடியோஸ் இப்படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களில் சிலரை இன்று ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது .

- Advertisement -

சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் ஜான் கோகன். இவர் துணிவு படத்தில் க்ரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக பட குழு வெளியிட்டுள்ளது . மேலும் புகழ்பெற்ற நடிகர் ஆன பகவதி பெருமாள் ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். பிரபல குணச்சித்திர நடிகர் பிரேம் பிரேம் என்ற கதாபாத்திரமாகவே திரைப்படத்தில் வருகிறார் .

- Advertisement -

மேலும் நடிகர் மோகனசுந்தரம் மைப்பா என்ற கதாபாத்திரத்திலும் வீரா அவர்கள் ராஜேஷ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள் . இந்த கதாபாத்திரங்கள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன . முக்கிய கதாபாத்திரங்களான அஜய் அவர்கள் ராமச்சந்திரன் என்ற கதாபாத்திரத்திலும் பிரபல இயக்குனரும் குணச்சித்திர நடிகர் சமுத்திரக்கனி தயாளன் என்ற காவல்துறை அதிகாரி ஆகவும் படத்தின் நாயகி மஞ்சு வாரியார் அவர்கள் கண்மணி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள் .

படத்தின் நாயகன் ஆன தலையின் கதாபாத்திரம் இன்று பின்னேரம் வெளியிடப்படலாம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .

Most Popular