சினிமா

ரோகினி தியேட்டரில் அடிதடி.. ! தளபதி விஜய்யின் கட் அவுட் பேனர்களை கிழித்து எறிந்த அஜித் ரசிகர்கள் !

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே அதன் ரிலீஸ் என்று ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். அது போட்டியாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் சில நேரங்களில் அந்தப் போட்டியானது பொறாமையாக மாறிவிடும் . அது இரு தரப்புகளுக்கும் இடையே பகையை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும் .

பொதுவாக அஜித் மற்றும் விஜய் படங்கள் என்றால் அவர்களின் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் கலைக்கட்டும். அதுவும் தல தளபதி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது என்றால் கொண்டாட்டத்திற்கும் ஆரவாரத்திற்கும் பஞ்சம் இருக்காது. இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் துணிவு மற்றும் அரிசி படத்திற்கான கொண்டாட்டங்களை நேற்றிலிருந்து ரசிகர்கள் ஆரம்பித்து விட்டனர் .

Advertisement

தங்கள் தலைவர்களின் கட்டவுட் கல் மற்றும் பேனர்கள் என திரையரங்குகளில் வைத்து அவற்றிற்கு பாலாபிஷேகம் மாலை அணிவிப்பது என அமர்க்களம் செய்து வருகின்றனர் ரசிகர்கள் . அஜித் ரசிகர் ஒருவர் கிரேன் மூலம் அலகு குத்தி அவரது கட்டவுட் இருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தது நாம் அறிந்ததே .

இந்நிலையில் சென்னை ரோகினி தியேட்டரில் தல அஜித்தின் துணிவு படமும் தளபதி விஜயின் வாரிசு படமும் இன்று வெளியாகியிருந்தது . இதற்காக அஜித் ரசிகர்கள் வைத்திருந்த பேனரின் மீது விஜய் ரசிகர்கள் அவரது பேனரை இக்கட்டி வைத்திருந்தனர் . இதனால் இருதரப்பிற்கும் இடையே முதல் வரும் சூழ்நிலை உருவானது இதனை அடுத்து காவல்துறையினர் தலையிட்டு தல படத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த விஜய் பேனரை அகற்றினர் . இதனால் அந்த பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது . இருதரப்பிற்கும் இடையே காவல்துறையினர் தலையிட்டு சூழ்நிலையை கையாண்டதால் நிலைமை சுமுகமானது .

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top