சினிமா

ஆரம்பமானது தல தளபதி போட்டி… ! துணிவு டிரெய்லரை முந்தி தளபதி விஜய்யின் வாரிய புதிய சாதனை !

தமிழ்நாட்டில் தைப்பொங்கல் ஆனதை நெருங்கிக் கொண்டிருக்கிறது தைப்பொங்கல் என்றாலே தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வருவது வழக்கம் . இது எம்ஜிஆர்-சிவாஜி காலம் தொட்டே வந்து கொண்டிருக்கும் ஒரு பழக்கமாகும் . அதன் பிறகு ரஜினி-கமல் விஜய்-அஜித் விக்ரம்-சூர்யா சிம்பு-தனுஷ் என கிளாஷ் ஆப் டைட்டன்ஸ் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன .

இத்தனை கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு போட்டி இருந்தாலும் ரஜினி கமல் போட்டிக்கு பிறகு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோருக்கு இடையே நடக்கும் போட்டியாகும் . இந்தப் போட்டி தான் கடந்த கால் நூற்றாண்டு சினிமா வரலாற்றில் முக்கிய போட்டியாக இருந்து கொண்டிருக்கிறது .

Advertisement

இந்த வருட பொங்கலுக்கும் மற்றொரு தல தளபதி யுத்தத்திற்காக தமிழ் திரை உலகமும் தமிழ் சினிமா ரசிகர்களும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் . வருகின்ற 11 மற்றும் 12ஆம் தேதிகளில் தல அஜித் நடித்த துணிவு படமும் தளபதி நடித்த வாரிசு படமும் திரைக்கு வர இருக்கிறது .

இந்த இரண்டு படங்களும் அறிவிப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய படங்களாகும் . வாரிசு படம் தெலுங்கின் வெற்று இயக்குனரான தொம்சி அவர்களால் இயக்கப்பட்டு தமன் அவர்களின் இசையில் உருவாகி இருக்கின்றது . இது ஃபேமிலி சென்டிமென்ட் ஆக்சன் கலந்து தளபதி ஸ்டைலில் உருவாகியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தல அஜித்தின் துணிவு படமானது தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று நேர்கொண்ட பார்வை வலிமை போன்ற படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் ஹாலிவுட் ஸ்டைலில் வங்கிக் கொள்ளையை கருவாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம் . இதனால் ஆக்சன் காட்சிகளுக்கும் ஸ்டண்டுகளுக்கும் இந்த படத்தில் பஞ்சம் இருக்காது .

வாரிசு படத்தின் இசை வெளியீடானது கடந்த 24 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது . துணிவு படத்தைப் பற்றிய எந்த செய்திகளும் அப்போது வராததால் தல ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். டிசம்பர் 31ம் தேதி ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக துணிவு படக் குழுவினர் படத்தின் டிரைலரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஹலோகிராம் முறையில் முதல்முறையாக வெளியிட்டு சாதனை படைத்ததோடு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்த ட்ரெய்லரானது வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது . துணிவு படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியான நிலையில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படவில்லை . மேலும் படம் பொங்கலுக்கு ரிலீசாகுமா என்று சந்தேகமும் தளபதி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது . வாரிசு படத்தினை பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என்று தளபதி ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர் . அவர்களுக்கு டபுள் ட்ரீட்டாக வாரிசு படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதியை நேற்று அறிவித்து தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியது படக் குழு .

Advertisement

இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பாகவே தல-தளபதி போட்டி ஆரம்பமாகிவிட்டது, சமூக வலைதளங்களுக்கு முந்தைய காலகட்டங்களில் படம் வெளியான பின்பு தான் பந்தயத்தில் யார் ஜெயிக்கிறார்கள் என்று தெரியவரும் . ஆனால் இப்போதோ ட்ரெய்லரில் இருந்தே கவுண்டவுனை ஆரம்பிக்கின்றார்கள் ரசிகர்கள் .

கடந்த 31ஆம் தேதி வெளியான துணிவு ட்ரெய்லரானது நேற்று வரை 1.4 மில்லியன் பார்வையாளர்கள் யூடியூப் வலைதளத்தில் துணிவு படத்தின் டிரைலரை கண்டிருக்கின்றனர். ஆனால் நேற்று வெளியான வாரிசு படத்தின் டிரைலர் இந்த சாதனையை 4 மணி நேரத்தில் முறியடித்து 1.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டி சாதனை படைத்துள்ளது . துணிவு படத்தின் டிரைலர் நான்கு நாட்களில் கிடைத்த பார்வையாளர்களை வாரிசு படத்தின் டிரைலர் நான்கு மணி நேரத்தில் சாதித்திருப்பது தளபதி விஜய் தான் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக தளபதி விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top