பாலிவுட் சினிமாவில் தன் அழகாலும் தன் நடிப்பாலும் முன்னணி நடிகைகளில் ஒருவரானவர் தீபிகா படுகோன். இவர் ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் நடித்த ஓம் சாந்தி ஓம், பாஜிரோ மஸ்தானி, சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவதி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் பத்மாவதி, சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையில் ஒருவரானவர் தீபிகா படுகோன்.
இவ்வாறான புகழ்களைப் பெற்ற தீபிகா படுகோன் நேர்காணல் ஒன்றில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் பள்ளி பருவத்தில் பேட்மிண்டனில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் அதற்காக தான் காலை 5 மணிக்கு எழுந்து தன் பயிற்சியை தொடங்குவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இன்னும் சில விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டிருந்ததாக தீபிகா படுகோன் அந்த நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த சில காலங்களாக இருந்த மன அழுத்தத்தால் தீபிகா பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் இவர் வழக்கமாக காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் பழக்கத்தை மாற்றி, தான் தாமதமாக எழுந்தால் மன அழுத்தத்தை சரி செய்யலாமோ என்று எண்ணி தான் அதையும் செய்து வந்திருக்கிறார். ஆனால் அது எதுவும் அவருக்கு பயனளிக்கவில்லை. தன் வாழ்வே வெறுமையாக இருந்தது போன்ற உணர்வும் அவருக்கு இருந்தது . தனக்கு காரணமே புரியாமல் தான் தற்கொலை முயற்சி செய்து கொள்ளலாம் என்று கூட பலமுறை அவருக்கு தோன்றி இருக்கிறதாம்.
இந்த நிலையில் தீபிகா படுகோனின் இந்த நிலையை கண்ட அவரது தாய், ஏன் இவ்வாறான மன அழுத்தம் உனக்கு வந்தது? உன்னை சுற்றி எல்லாம் நலமாக தானே உள்ளது. நீ வேலை செய்யும் இடங்கள் இதில் ஏதாவது இடையூறு இருக்கிறதா இன்று தீபிகா படுகோனின் தாய் கேட்டார்கள் என்று அந்த நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் கூறி இருந்தார்.
இப்படி தன் தாய் கேட்ட பிறகும் அவருக்கு அப்படி எந்த காரணமும் இருப்பதாக தோன்றவில்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனாலும் தனக்கு ஏற்படும் இந்த மன அழுத்தத்தை சரி செய்ய அவர் நிறைய வழிகளை மேற்கொண்டு இருக்கிறார்.ஒரு சிறந்த மனநல மருத்துவரையும் அணுகி, அவருடைய ஆலோசனையின் படி அவர் சிகிச்சை எடுத்து இருக்கிறார்.
மேலும் அவ்வாறு அவர் மேற்கொண்ட வழிகளால் அவருக்கு நன்மைகள் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு தான் சகஜ நிலைக்கு வந்து மன அழுத்தத்தில் இருந்து மீண்டதாக கூறியிருக்கிறார்.இதில் சுவாரசியம் என்னவென்றால் தான் அனுபவித்த மன அழுத்தத்தை போன்று மன அழுத்தத்தால் தவிப்பவர்களுக்கு ஆலோசனை செய்வதற்காக தீபிகா படுகோன் தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார் .