Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகோப்ரா தோல்விக்கு தரமான கம்பேக் தயாராகிறது… ! அஜய் ஞாணமுத்துவின் டிமாண்ட் காலணி 2 டீஸர்…...

கோப்ரா தோல்விக்கு தரமான கம்பேக் தயாராகிறது… ! அஜய் ஞாணமுத்துவின் டிமாண்ட் காலணி 2 டீஸர்… !

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் அருள்நிதி. சமீபத்தில் கூட இவர் நடித்த டைரி படமானது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது . இதனைத் தொடர்ந்து தற்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகமான டிமான்டி காலனி 2 படத்தில் நடித்து வருகிறார் .

- Advertisement -

அஜய் ஞானமுத்து இயக்க உள்ள இந்த படமானது 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்தப் படத்தில் அருள் நிதியுடன் பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைன், டிசேரிங் டோர்ஜோ, அருண் பாண்டியன், முத்துகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனா காலிட், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

டிமான்டி காலனி முதல் பாகம் வந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து . இந்தப் படமும் முதல் பாகத்தைப் போலவே ஹாரர் திரில்லர் ஜெனரில் உருவாக இருக்கின்றது . இப்படத்திற்கு சிஎஸ்.ஷாம் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

ஞானமுத்து பட்டரை மற்றும் வெயிட் நைட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஓசூர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜய் ஞானமுத்து இதற்கு முன் சியான் விக்ரமை வைத்து இயக்கிய கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியடையவில்லை . இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை இயக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.

- Advertisement -

தற்போது டிமான்டி காலனி 2 பட குழுவினர் இந்தப் படத்திற்கான மோஷன் பிக்சரை இன்று யூட்யூபில் வெளியிட்டுள்ளனர். அட்டகாசமாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் பார்க்கும்போதே திகிலை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது . இருள் ஆளப்போகிறது என்ற வசனங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அந்த போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை தற்போது எதிர வைத்திருக்கிறது

Most Popular