சினிமா

தனுஷ்-அனிருத் உறவில் மீண்டும் விரிசலா? ஒப்பந்தமாகிய படத்திலிருந்து விலகினாரா அனிருத் … விபரங்கள் என்ன!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்தி மற்றும் ஹாலிவுட் வரை தனது பெயரை நிலைநாட்டியவர். சமீபத்தில் இவர் நடித்த பார்ட்டி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கேப்டன் மில்லர் திரைப்படத்தினை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷின் ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். தனுஷ் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

தமிழ் சினிமா ரசிகர்களால் ராக் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுபவர் அனிருத். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய முதல் திரைப்படம் ஆன மூன்று திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். ஒய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் இவரை கொண்டு சேர்த்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜித் விஜய் விஜய் சேதுபதி சிவா கார்த்திகேயன் என அனைவரது படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது இசையில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவரது புகழ் உச்சத்திற்கு சென்று விட்டது. தற்போது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Advertisement

அனிருத்தின் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் தனுஷ். மூணு படத்தில் அனிருத் இசையமைப்பாளரானதிலிருந்து தொடர்ச்சியாக தனது படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டவர். இந்த இருவரது காம்பினேஷனிலும் உருவான அனைத்து படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட். இவர்கள் இருவரும் இணைந்து வேலையில்லா பட்டதாரி மாரி தங்க மகன் போன்ற திரைப்படங்களில் பணியாற்றி இருக்கின்றனர். இந்நிலையில் சமீப காலமாக தனுஷ் மற்றும் அனிருத் இருவரது கூட்டணியிலும் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை.

இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு அல்லது முரண்பாடு இருப்பதாக ஹாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசு பரவியது . அந்த சூழ்நிலையில் இருவரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்றினர் . அந்தத் திரைப்படத்தின் பாடல்களும் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் அனிருத் இன் காம்பினேஷனில் தனுஷின் ஐம்பதாவது படம் டி50 ஒப்பந்தமானது. இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.

Advertisement

ஆனால் தற்போது அனிருத் இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷின் ஐம்பதாவது படத்தில் கமிட் ஆகி இருந்த அனிருத் அந்தத் திரைப்படத்திலிருந்து விலகி டாடா படத்தில் ஹீரோவாக நடித்த கவின் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க கமிட்டாகி இருப்பதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. டி 50 திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளமான ஆறு கோடி ரூபாயையும் அனிருத் திருப்பி செலுத்தி விட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஒரு சிறிய படத்தில் கமிட் ஆவதற்காக மிகப்பெரிய ப்ராஜெக்ட் அனிருத் விட்டு வருகிறார் என்றால் நிச்சயமாக இருவருக்கும் இடையில் ஏதோ மனக்கசப்பு இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top