சினிமா

மீண்டும் இணையும் தம்பதி!

முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் 2004ஆம் ஆண்டு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளனர் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது தனுஷிற்கு வயது 21. ஐஸ்வர்யாவிற்கு வயது 24. இந்த தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளன.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மனம் ஒத்து பரஸ்பரமுறையில் பிரிவதாக 9 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, மற்றும் நல விரும்பிகளாக, எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்த பந்தத்தை விட்டு விலகுகிறோம்”. என தனுஷ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

“இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நாங்கள் இருவரும் இருக்கிறோம். அதனால் பரஸ்பர முறையில் நாங்கள் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். தயவுசெய்து எங்கள் முடிவை மதித்து, தனி மனித சுதந்திரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அறிவிப்பு செய்தியில் குறிப்பிட்டிருந்தார். இது பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்துக்கும் இந்த தம்பதிகள் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இந்த தம்பதியின் விவாகரத்து குறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியதாவது: “இது கணவன் மனைவிக்குள் நிகழும் சாதாரண கருத்து வேறுபாடு தான். அதில் நான் தலையிட்டு கருத்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மீண்டும் மீண்டும் இது குறித்து கேள்விகள் எழுப்பி வருத்தத்தை ஏற்படுத்த வேண்டாம்” என நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

தம்பதியினரை மீண்டும் இணைப்பதற்கு இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. மேலும் இத்தம்பதியினர் தன் மகன்களுக்காக இணைவார்கள் என நெருங்கிய நண்பர்கள் கூறிய தகவலில் இருந்து தெரியவந்தது.

அதற்கு ஏற்றாற்போல, தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து முடிவை திரும்ப பெறுவதாக தெரியவந்துள்ளது. இதுபற்றி இன்னும் கலந்து ஆலோசித்து இணைவதா? அல்லது நிரந்தரமாக பிரிவதா? என முடிவு செய்யவுள்ளதாகவும் வெளியாகிய தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top