Monday, May 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதனுஷ் பட நாயகிக்கு திருமணமா ?…. பிரபல அரசியல் பிரமுகரின் மகன் மாப்பிள்ளையா?,….. கோடம்பாக்கத்தில் பரபரப்பு...

தனுஷ் பட நாயகிக்கு திருமணமா ?…. பிரபல அரசியல் பிரமுகரின் மகன் மாப்பிள்ளையா?,….. கோடம்பாக்கத்தில் பரபரப்பு !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான  பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ் . இந்தத் திரைப்படத்தில் சிம்ரனின் மகளாக நடித்திருந்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது . இதனைத் தொடர்ந்து என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில்  தனுசுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் . சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் .

- Advertisement -

தற்போது  மிர்ச்சி சிவா உடன் இவர் நடித்த  சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்  என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் . மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படமும்  இவரது நடிப்பில் உருவானது . இந்த திரைப்படங்கள் தற்போது வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றிருக்கின்றன

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த  மேகா ஆகாசின் தாயார் கேரளாவைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .  2017 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் இருந்து வரும் இவர் மீது  இதுவரை எந்த ஒரு கிசுகிசு  அல்லது காதல் விவகாரங்கள் எதுவும் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் திருமணத்திற்கு நிச்சயம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது . இந்த செய்திகள் தான் தற்போது ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கின்றன . இந்த செய்திகளால் அவரது ரசிகர்களும் சினிமா விமர்சிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர் . சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான இணையதளத் தொடர் ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சினிமாவில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வரும் போது அவருக்கு திருமணமா என ரசிகர்கள் வியந்து போய் இருக்கின்றனர் .

- Advertisement -

தற்போது மேகா ஆகாசின் திருமணம் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது . அதன்படி தமிழகத்தைச் சார்ந்த பிரபல கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனை இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக  அந்த செய்திகள் தெரிவிக்கின்றன . மேலும் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று  தகவல்கள் வெளியாகி இருக்கிறது . இந்த செய்திகள் உண்மையா அல்லது வதந்தியா என இன்னும் ஒரு நாட்களில் தெரியவரும் .

Most Popular