Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஆபரேஷன் அப்புறம் இருப்பேனா தெர்ல.. அஜித்தின் வெளி வராத துயரத்தை கூறிய சுந்தர் சி.. !

ஆபரேஷன் அப்புறம் இருப்பேனா தெர்ல.. அஜித்தின் வெளி வராத துயரத்தை கூறிய சுந்தர் சி.. !

தல அஜித்குமார் இன்று கோலிவுட்டின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்தத் இடத்திற்கு அவர் வந்ததற்கு எத்தனையோ துயரங்களை சந்தித்துள்ளார், அதனை பல நபர்கள் சொல்லிக் கேட்டுள்ளோம். அண்மையில் அரண்மனை 4 புரொமோஷனுக்காக நேர்காணல் நிகழ்ச்சித் ஒன்றில் அஜித்துடன் ஷூட்டிங் செய்த அனுபவங்களை இயக்குனர் சுந்தர் சி கூறினார்.

- Advertisement -

1999ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அஜித், மாளவிகா நடித்த திரைப்படம் உன்னைத் தேடி. இப்படம் 100 நாட்கள் மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. இந்தப் படத்துக்கு அஜித் எவ்வளவு பெரிய துயரங்களை சந்தித்தார் என்பதை சுந்தர் சி கூறியுள்ளார். அவர் சொல்லும் போதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

சுந்தர் சி கூறியதாவது, ” நியூசிலாந்தில் 15 நாட்கள் பாடல் காட்சிகள் உட்பட ஷூட்டிங் திட்டமிடப்பட்டது. அப்போது அஜித் என்னிடம் விரைவில் தன் பகுதிகளை முடிக்கச் சொல்லிக் கேட்டார். காரணம், முதுகில் ஆபரேஷன் செய்ய வேண்டும், எனக்கு மருத்துவர் தேதி கொடுத்துவிட்டார். இன்னும் 7 நாட்களுக்குள் சென்றாக வேண்டும் இல்லையெனில் அவர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், பிறகு பிடிக்க முடியாது. “

- Advertisement -

” இந்த சிகிச்சைக்குப் பிறகு நான் எழுந்து உட்காருவேனா எனக் கூட உறுதியாகத் தெரியவில்லை. அதனால் உங்களுக்கு சிரமம் கொடுக்காமல் இப்போதே என்னுடைய ஷூட்டிங்கை முடித்துவிட்டு செல்கிறேன் என்றார் அஜித். ” என சுந்தர் சி சொன்னார். இதனை தயாரிப்பாளர்களுக்கு கூட தெரியவிடாமல் பார்த்துக் கொண்டார் அஜித்.

- Advertisement -

மேலும் சுந்தர் சி, ” ஒரு முறை நாங்கள் ஷூட்டிங் செல்லும் போது காலையில் தண்ணி அவ்வளவு சில்லென்று இருந்தது. யாராலும் தொடக் கூட முடியவில்லை. ஆனால் அஜித் சாரோ சுலபமாக வெறும் காலில் நடந்தார். உடனே நான் என்ன சார் ஹீரோவாக இருக்கலாம் என்பதற்காக இப்படிக் கூடவா எனக் கேட்க, அதற்க்கு அவர் தனக்கு முதுகுப் பிரச்சனையால் உணர்வே இல்லை எனச் சொன்னார். அடுத்து எடுத்து வைக்கும் அடி கூட அவருக்கு உணர்வில்லமல் தான் இருக்கும். ” என்றார். ஆரம்பக் காலத்தில் அவர் ரொம்ப கடினமாக உழைத்தார், அதனால் தான் இன்று வெற்றியாளராக வலம் வருகிறார் என சுந்தர் சி பெருமையாக பேசினார்.

Most Popular