Friday, September 13, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாமீண்டும் தள்ளிப் போகும் ராயன் திரைப்படம்.. காரணம் ரஹ்மான் & தனுஷ் தான்.. !

மீண்டும் தள்ளிப் போகும் ராயன் திரைப்படம்.. காரணம் ரஹ்மான் & தனுஷ் தான்.. !

இந்த ஆண்டின் முதல் பாதி இதுவரை தமிழ் சினிமாவுக்கு மிகவும் மோசமாக உள்ளது. போகிறப் போக்கைப் பார்த்தால் அது அடுத்த மாதமும் நீடிக்கும் போல. அடுத்த மாதம் வெளியாக தயாராக இருக்கும் படங்கள் மீண்டும் தள்ளிப் போகிறது.

- Advertisement -

இந்த ஆண்டு தமிழகத்தில் மலையாளப் படங்களும், ரீ-ரிலீஸ் படங்களை வைத்து தான் தியேட்டர் நிர்வாகிகள் சம்பாதித்து வருகிறார்கள். மிக முக்கியக் காரணம், தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவும் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. பெரிதாக எதிர்பார்த்த கவினின் ஸ்டார் படமும் மிகவும் சுமாரான படமாகவே அமைந்தது.

இந்த வறட்சியைப் போக்க அடுத்த மாதம் அடுத்தடுத்து 2 பெரிய படங்கள் வெளியாவதாக அறிவிப்புகள் வந்தன. ஒன்று தனுஷ் தானே இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படம், மற்றொன்று கமல்ஹாசன் – ஷங்கரின் இந்தியன் 2. முதலில் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் வருவதாக அறிவித்து பிறகு ஜூலை என மாற்றிக் கொண்டது. இதனால் ஜூன் காலியாக இருப்பதால் இந்த மாதத்தில் ராயன் படத்தை இறக்க தனுஷ் & கோ முடிவெடுத்து.

- Advertisement -

தனுஷ் முதலில் ராயன் படத்தை ஏப்ரல் மாதம் தேர்தலுக்கு அடுத்த தினமே வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் ரீ ரெக்கார்டிங் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் ஜூன் மாதத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த வாரம் இரு பாடல்கள் வெளியாகி அனைத்தும் சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் அதிர்ச்சி.

- Advertisement -

படத்தில் இன்னும் ரஹ்மானின் பணி முடியாததாலும் படத்தில் சிலக் காட்சிகளை மீண்டும் ஷூட் செய்ய வேண்டுமென தனுஷ் நினைப்பதாலும் ராயன் படம் தள்ளிப் போக அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால ஜூன் 2ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய இசை வெளியீட்டு விழாவையும் ஒத்தி வைக்கின்றனர். இதனால ஜூன் மாதமும் ஒரு வெறுமை தான் தமிழ் சினிமாவுக்கு.

ஜூன் மாதம் மற்றொரு பெரிய படமான கல்கி பல முறை தள்ளிப் பொய் ஜூன் 27ஆம் தேதியை லால் செய்தது. அதுவும் மறுபடியும் தள்ளிப் போகிறது. இப்படி ஒவ்வொரு படமும் அறிவிப்பை மட்டும் வெளியிட்டுவிட்டு தள்ளிப் போவதால் ரசிகர்களும் ஏமாற்றத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்த மாதத்தை விட்டால் மறுபடியும் தேதிகள் பிடிப்பது கடினம், ஏனென்றால் மற்றப் படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் புக் செய்துள்ளது.

ஜூலை மாதம் இந்தியன் 2 திரைப்படம் தான் தமிழ் சினிமாவுக்கு பெரிய ஹிட்டாக அமையும் போல. அடுத்தப்படியாக இந்தியன் 2 வெளியான ஒரே வாரத்தில் வணங்கான் படமும் வெளியாகவுள்ளது. இயக்குனர் பாலாவின் அத்திரைப்படம் சினிமா துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாம். ஜூலை மாதம் நம் மக்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது.

Most Popular