Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதுருவ நட்சத்திரம் குறித்து மாஸ் அப்டேட்..! திரைக்கு எப்போது வருகிறது?

துருவ நட்சத்திரம் குறித்து மாஸ் அப்டேட்..! திரைக்கு எப்போது வருகிறது?

- Advertisement -

2018 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக இருந்தது துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம். இந்த திரைப்படம் பல சிக்கல்களை மேற்கொண்டு எடுக்கப்பட்டு வந்தது. இந்த திரைப்படத்தின் நடிகர் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள்.

மேலும் சிம்ரன் பார்த்திபன் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு முன்பே எடுக்கத் தொடங்கியது.
வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

- Advertisement -

மற்ற திரைப்படங்களையும் போல ஒரே நிலையாக இந்த திரைப்படத்தை எடுக்கப்பட முடியவில்லை. இந்தத் திரைப்படம் முதலில் நடிகர் சூர்யா மற்றும் தீபிகா படுகோனே வைத்து இயக்கலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்தார்கள். திடீரென்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் விக்ரமை தேர்வு செய்து படம் எடுக்கத் தொடங்கினார். 2016 இல் இந்த படம் உருவாக்க தொடங்கி ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டது.

- Advertisement -

இப்படி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் பண நெருக்கடியால் இந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.ஆனால் தற்பொழுது இந்த திரைப்படம் இறுதிக்கட்டத்தை அடைந்து முழுமையாக உருவாக்கப்பட்டு முடிவடைந்தது. தற்பொழுது இந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதனால் விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை திரையரங்குகளில் காணலாம் என்று ரசிகர்களுக்கு படக்குழுவினர்கள் நற்செய்தி அளித்திருக்கிறார்கள்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2001 கௌதம் வாசுதேவ்  இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து இன்று வரை ரசிகர்களால் போற்றப்பட்டு வரும் மின்னலே திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்தார் அதை மீண்டும் இவர்களுடைய இணைப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular