Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாபொன்னியன் செல்வன் 2 எப்படி இருந்தது? பிளஸ், மைனஸ் என்ன?

பொன்னியன் செல்வன் 2 எப்படி இருந்தது? பிளஸ், மைனஸ் என்ன?

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெளியாக இருக்கிறது. முதல் பாகத்துக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு இரண்டாவது பாகத்திற்கு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில்  முதல் நாள் மட்டும் தமிழகத்தில் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பொன்னின் செல்வன் 2, முதல் பாகத்தை மிஞ்சியதா இந்த படத்தின் பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதை தற்போது பார்க்கலாம். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் படத்தின் திரைக்கதை வேகமாக சென்றது தான். அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், படம் முடிந்த பிறகு ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என ரசிகர்களை நினைக்க வைத்தது.

- Advertisement -

ஆனால் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் அப்படி இல்லை. திரைக்காதை நமது டவுன் பஸ் வேகத்தில் மெதுவாக சென்றது. பெரும்பாலும் படத்தின் கதை இதுதான் என்று தெரிந்து விட்டதால் காட்சிகளிலும் திரைக்கதைகள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த இயக்குனர் மணிரத்தினம் தவறிவிட்டார்.

- Advertisement -

முதல் பாகத்தில் இருந்த பிரம்மாண்டமும் கிராபிக்ஸ் காட்சிகள் இரண்டாவது பாகத்தில் அவ்வளவாக இல்லை. குறிப்பாக முதல் பாகத்தில் போர் காட்சிகளில் அவ்வளவு சிறப்பாக இருக்கும். ஆனால் இரண்டாவது பாகம்  சாதாரண படத்தில் வரும் போர் காட்சியில் முடித்து விட்டார்கள்.

முதல் பாகத்தில் சில பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்தது. ஆனால் இரண்டாவது பாகத்தில் பெரிய அளவில் பாடல்களும் வரவில்லை. இரண்டாவது பாகத்திற்கு நந்தினி கரிகாலன் இடையில் ஆன காதல், பகை என இரண்டுக்கும் அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அதற்காக படத்தில் ஏதும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

பொண்ணியின் செல்வன் நாவல் படிக்க முடியாதவர்களுக்கு ஒரு நாவலை படமாகவே பார்த்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும். மேலும் தஞ்சை ஆண்ட ராஜராஜ சோழனின் முற்பகுதி எப்படி இருந்தது என்பதை இந்தப் படத்தின் மூலம் நிச்சயம் நாம் அறிய முடியும். குறிப்பாக தமிழ் உணர்வு உள்ளவர்களுக்கும் தஞ்சை சேர்ந்தவர்களுக்கும் பல மெய் சிலிர்க்கும் காட்சிகள் நிச்சயம் படத்தின் உள்ளது.

ராஜராஜ சோழன் எவ்வாறு தனக்கு வந்த ஆபத்தை தாம் கற்ற கலை மூலம் காத்துக்கொண்டார் போன்ற மெய்சிலிர்க்கும் காட்சிகள்  நிச்சயம் கிளாப்ஸ்களை அள்ளும். இதே போன்று நந்தினி யார்? ஊமை ராணி யார் போன்ற கேள்விகளுக்கு இந்த படம் பதில் சொல்லும். படத்தின் நீளம் மேலும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. படத்தை இன்னும் சுருக்கி இருந்தால் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாகவே இருக்கும். பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தமிழகத்தை தாண்டி பெரிய அள்ள்வில் வரவேற்பு பெறாது.

Most Popular