இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்தியாவிலேயே மிகவும் வேண்டப்பட்ட இயக்குனராக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து தயாரிப்பாளர், துணை நடிகர், ஹீரோ என வெவ்வேறு துறையில் கால் பதித்துள்ளார்.
அண்மையில் பாடல் வீடியோ ஒன்றுக்கு லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். அதன் வெளியீட்டு விழாவில் தலைவர் 171, கைதி 2 ஆகிய படங்களின் முக்கிய அறிவிப்புகளை வழங்கினார் லோகேஷ் கனகராஜ். மறுபக்கம், காதல் காட்சிகள் பெரிதாக இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் படங்கள் செய்பவர், இப்போது காதல் வீடியோவில் வருகிறார் என ஆச்சர்யத்தில் ரசிகர்கள் திகைத்துள்ளனர்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகனாக லோகேஷ் கனகராஜ் கமலுக்கு மிகவும் நெருக்கமானவராக ஆகியுள்ளார். சமீபத்தில் கமல்ஹாசன் – அவரது மகள் ஸ்ருதி ஹாசன் – லோகேஷ் கனகராஜ் மூவரும் இணைந்து ‘ இனிமேல் ’ எனும் பாடல் வீடியோவில் பணி புரிந்தனர். கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதி, தயாரிக்க மகள் ஸ்ருதி ஹாசன் இசையமைத்து பாடியுள்ளார்.
இதில் லோகேஷ் கனகராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் வந்து முதல் முறையாக ரொமான்ஸ் செய்துள்ளார். இப்பாடலை இன்று வெளியிட்டு லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நிகழ்ச்சியில் பேசினர்.அதில் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கத்தில் அடுத்து எப்போது படங்களை தொடர்வார் என்பது குறித்த முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் படம் செய்யவுள்ளார். சம் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏப்ரல் மாதம் துவங்கவிருந்த ஷூட்டிங் ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக லோகேஷ் கூறினார். ரஜினிகாந்த் – லோகேஷ் படம் ஒன்றரை ஆண்டுகம் ஷூட்டிங் செய்யப்படவுள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் மற்றும் ப்ரீ புரெட்க்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளாராம். மேலும் இப்படத்தை முடித்த ஒரே மாதத்தில் எல்.சி.யூவில் ஒன்றான கைதி 2 படத்தை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.