தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் பேரரசு . விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் உருவான திருப்பாச்சி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து சிவகாசி என்ற படத்தை இயக்கினார் அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் . அதன் பிறகு அஜித் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது .
அஜித் குமார் நடிப்பில் திருப்பதி என்ற திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் கலமையான விமர்சனங்களை பெற்றது . அதன்பிறகு புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை வைத்து தர்மபுரி மற்றும் வரத்தை வைத்து பழனியாகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் . இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் சிறு சிறு வேடங்களில் நடித்தும் வந்தார் . சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தளபதி விஜய் உடன் ஆன ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் .
அந்தப் பேட்டியில் சிவகாசி சூட்டிங் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் பேரரசு . எப்போதுமே படப்பிடிப்பில் அமைதியாக இருக்கும் விஜய் இப்போதாவது தான் கோபப்படுவார் என்றும் அவர் கோபப்பட்டால் எவ்வாறு இருக்கும் என்றும் தனது பேட்டியில் விவரித்து இருக்கிறார் . சிவகாசி சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஒருமுறை தளபதி விஜய் கோவப்பட்டு இருக்கிறார் . இதனைக் கண்ட இயக்குனர் பேரரசு தான் பயந்து போய் விட்டதாக தெரிவித்திருக்கிறார் .
சிவகாசி திரைப்படத்தின் சூட்டிங் இப்போது தளபதி விஜய் பேட்டி எடுப்பதற்காக சில பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள் . மேலும் அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்களை எடுத்துள்ளனர் . விஜய் இடம் பேட்டியும் எடுத்துவிட்டு சென்ற அவர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை வைத்து சிவகாசி படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என அவர்களே புனைந்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளனர் . இதனை கேள்விப்பட்ட விஜய் கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார் . சூட்டில் நடந்து கொண்டிருக்கும்போது பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டவர் கடும் கோபத்தில் அவர்களிடம் உரையாடி இருக்கிறார்
ஒரு காட்சியை படமாக்குவதற்காக தளபதி விஜய் அழைக்க சென்று இருக்கிறார் பேரரசு . அப்போது அவர் போனில் கோபமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த இவர் பயந்து திரும்பி விட்டார் . அந்த நேரத்தில் மற்ற நடிகர்களின் காட்சியை படமாக்கி இருக்கிறார் . விஜய் வந்ததும் அவருக்கு ஒரு அரை மணி நேரம் ஓய்வு கொடுத்து நார்மலான பிறகு தான் அவருடைய காட்சிகளை படமாகி இருக்கிறார் . இந்த சம்பவத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் பேரரசு . தளபதி விஜய் அவ்வளவு சீக்கிரமாக கோபப்பட மாட்டார் என்றும் அவர் கோபப்பட்டால் பயங்கரமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் பேரரசு . கோபமாக போன் பேசி வந்த பிறகு சிறிது நேரத்திலேயே நார்மல் ஆகி சகஜமாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் என தெரிவித்திருக்கிறார் இயக்குனர் .