Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகெஞ்சி கேக்குறேன் என் படத்தைப் பாருங்கள்.. பிடிக்கலனா செருப்பால கூட அடிங்க.. விரக்தியில் கண் கலங்கிய...

கெஞ்சி கேக்குறேன் என் படத்தைப் பாருங்கள்.. பிடிக்கலனா செருப்பால கூட அடிங்க.. விரக்தியில் கண் கலங்கிய இயக்குனர் விக்னேஷ் ..!

இந்த ஆண்டு கோலிவுட் பெரிதாக இன்னும் ஜொலிக்கவில்லை. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது. இது தமிழ் இளம் இயக்குனர்களை சற்று பாதிக்கிறது என இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நடிகர் மற்றும் இயக்குனரான விக்னேஷ் கார்த்திக் , திட்டம் இரண்டு மற்றும் அடியே ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். இரண்டு படங்களும் பார்பதற்கு சுமாராக இருந்தாலும் வசூலில் மங்கியது. தற்போது மூன்றாவது திரைப்படமாக ஹாட்ஸ்பாட் எனும் படத்தை இயக்கியுள்ளார். நான்கு கதைகள் கொண்ட இப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கௌரி கிஷன், சோபியா, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெளியீட்டுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி அதில் படக்குழுவினர் பேசினர். இதில் பேசிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறியதாவது, “ இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற சிறிய படங்களுக்கு சுத்தமாக வரவேற்பே இல்லை. வாரத்திற்கு அத்தனை படங்கள் வந்தாலும் சில படங்களுக்கு முதல் நாள் கூட கூட்டம் இல்லை. அதனால் அவ்வகை படங்கள் இரண்டு தினங்கள் கூட திரையரங்கில் தங்குவதில்லை. ”

- Advertisement -

மேலும், “ மற்ற மொழிப் படங்களுக்கு கொடுக்கும் ஆதரவை தமிழ் படங்களுக்கு கொடுங்கள். எங்களுடைய படத்தை திரையரங்கில் வந்து பார்க்குமாறு மக்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். படத்தைப் பார்த்த பின்னர் உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட அடியுங்கள். ” என மிகுந்த விரக்தியில் பேசியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

- Advertisement -

அவர் சொன்னது போலவே இந்த ஆண்டு தமிழ் படங்களில் மக்கள் பெரிதாக விருப்பம் காட்டவில்லை. அதற்க்கு முக்கியக் காரணம், நல்ல திரைக்கதை கொண்ட படங்கள் வெளியாகாததால் தான். மறுபக்கம் மலையாள படங்கள் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால் இங்கோ நல்ல தமிழ் படங்கள் வராததால் பழைய படங்களை மீண்டும் ரீலீஸ் செய்து வசூல் பார்த்து வருகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

Most Popular