Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் விவாகரத்து செய்கிறாரா??? லால் சலாம் படத்திலிருந்து விலகுகிறாரா?? ராட்சசன் பட நாயகன் குழப்பமான ட்வீட்!

மீண்டும் விவாகரத்து செய்கிறாரா??? லால் சலாம் படத்திலிருந்து விலகுகிறாரா?? ராட்சசன் பட நாயகன் குழப்பமான ட்வீட்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, நீர்ப்பறவை, ராட்சசன், எஃப. ஐ.ஆர் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்களில் நடித்திருப்பவர். தற்போது விக்ராந்துடன் இணைந்து லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் திருவண்ணாமலையில் வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

தற்போது துறையுலகில் விஷ்ணு விஷால் பதிவு செய்த ஒரு ட்வீட்டால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இவர் கடந்த 2019 ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்து தம்பதியினருக்கு ஆரியன் என்ற மகன் இருக்கிறான். எட்டு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். அதன்பிறகு தனது நெருங்கிய நண்பரும் பேட்மிட்டன் வீரருமான ஜுவாலா கட்டாவை காதலித்து 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால்.

இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கும் ட்வீட் கோலிவுட்ல புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவரது பதிவை பார்த்த ரசிகர்களும் திரைவிமர்சகர்களும் விஷ்ணு விஷால் தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்யப் போகிறாரா? என்ன சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் தனது பதிவை நீக்கியிருக்கிறார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷாலுக்கும் ஜுவாலாவுக்கும் திருமணமாகி இரண்டு வருடங்களேயான நிலையில் அவரிடமிருந்து இப்படி ஒரு பதிவு சமூக வலைதளத்தில் வந்திருப்பது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

வாழ்க்கை பாடம் என்று தலைப்பிட்டு அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்த விஷ்ணு விஷால் ” பரவாயில்லை! மீண்டும் முயற்சி செய்தேன்! மீண்டும் தோல்வி அடைந்தேன்! மீண்டும் பாடம் கற்றுக் கொண்டேன்! கடந்த முறை என்னுடைய தவறல்ல. அது ஒரு துரோகம், ஏமாற்று வேலை என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது அந்தப் பதிவு அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பதிவு சம்பந்தமாக ரசிகர்களும், விமர்சகர்களும் பல்வேறு விதமான யூகங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

- Advertisement -

சிலர் அவர் தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்யப் போகிறாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. ஆனால் சிலர் அது யூகத்தின் படி விஷ்ணு விஷால் லால் சலாம் படத்திலிருந்து விலகியிருப்பதாகவும் அவர் ட்விட்டரில் இட்ட பதிவு அந்தத் திரைப்படத்தையும் அதன் இயக்குனரையும் பற்றியது என பதிவு செய்து வருகின்றனர். எனினும் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை.

Most Popular