Friday, April 19, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!- ஒரே தேதியில் இரண்டு படங்கள் ரிலீஸ்!

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!- ஒரே தேதியில் இரண்டு படங்கள் ரிலீஸ்!

சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ் . அதனைத் தொடர்ந்து மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளர் ஆனார் . 2010 ஆம் ஆண்டு வெளிவந்த நீதானா அவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அட்டக்கத்தி திரைப்படத்தில் பத்மாவாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டார் . அதனைத் தொடர்ந்து காக்கா முட்டை வடசென்னை தர்மதுரை போன்ற அடுத்த அடுத்த வெற்றி படங்களை கொடுத்தவர் தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

- Advertisement -

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிகரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இது மலையாள மொழியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது.ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கிறார் . யோகி பாபு மற்றும் போஸ்டர் நந்தகுமார் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர் .

டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாவதாக இருந்த இந்த திரைப்படமானது சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது . இந்நிலையில் இந்தத் திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர் . தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான டிரைவர் ஜமுனா என்று திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது . ஜனவரி 26 ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பர்கானா என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இவரது திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்கு வரிசையாக படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் .

- Advertisement -

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மலையாள இயக்குனரான ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ரன் பேபி ரன் இந்தத் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் . திரில்லர் கதை களத்தைக் கொண்ட இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.சமீபத்தில் திரைப்படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட்டு இருந்தார் . இந்தப் படமும் வருகின்ற பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது .

- Advertisement -

ஒரே நாளில் இவர் நடித்த இரண்டு படங்களும் வெளியாக இருப்பதால் ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பேருக்கு கதாநாயகி என்று வந்து போகாமல் நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.தமிழில் சிறிது காலம் விலகி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தடுத்த திரைப்படங்களின் வருகை அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Most Popular