சினிமா

இரட்டை குழந்தை விவகாரம்; விசாரணை வளையத்தில் நயன்-விக்னேஷ் சிவன் ஜோடி? – அமைச்சர் மா.சு கொடுத்த ஷாக் பதில்!

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார். 2015 ஆம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்த போது, நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்தனர். நாலு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. அதன் பிறகு வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்ற தம்பதியர், சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்களை ஏங்க வைத்தனர்.

விக்னேஷ் சிவன் இரு தினங்களுக்கு முன், மிகமுக்கிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நயனுக்கும் தனக்கும் ‘இரட்டை ஆண் குழந்தைகள்’ பிறந்துள்ளதாக அந்த பதிவின் மூலம் உலகுக்கு அறிவித்திருந்தார். மேலும், “நானும் நயனும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். இரண்டு ஆண் குழந்தைகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.” என எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றனர் என தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் மருத்துவ ஊரக பணிகள் இயக்குனரகம் வாயிலாக தெளிவான விளக்கம் கேட்கப்படும். இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி இருந்தால், இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான உரிய விசாரணையும் காவல்துறையினரால் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும், இரட்டை குழந்தைகள் எட்டு மாதத்தில் பிறந்ததாகவும், மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நயன்-விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top