சினிமா

ரீலீஸ் தேதி : நாங்க மட்டும் என்ன குறைஞ்சவங்களா… ! துணிவு படத்துடன் நேராக மோதுரோம் – தில் ராஜு அதிரடி !

தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாக இருப்பவர் நடிகர் விஜய் அவர்கள் . இவர் நடித்த பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியாக அமையவில்லை இதனால் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தளபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாரிசு இந்தப் படத்திற்கான இறுதி கட்ட பணிகள் எல்லாம் முடிந்து படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது .

இப்படத்திற்கான பாடல் வெளியிட்ட நிகழ்வு கடந்த 24 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது . இது வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிக அளவில் ஏற்படுத்தி இருக்கின்றது. படத்திற்கான பாடல்கள் வெளியிட்ட பின்பு ட்ரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக எந்தவித அறிவிப்பும் படக்குழுவினரிடம் இருந்து வரவில்லை . இதனால் வாரிசு படமானது பொங்கலுக்கு தல அஜித்தின் துணிவு படத்துடன் மோதுமா என்ற சந்தேகம் தளபதி ரசிகர்களுக்கு வந்து விட்டது .

Advertisement

தளபதி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக வாரிசு பட குழுவானது அந்தப் படத்திற்கான டிரைலரையும் ரிலீஸ் தேதி இன்று அறிவித்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளது . வாரிசு படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் நிச்சயமாக இந்த படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் தளபதி ரசிகர்களையும் கவறும் விதத்தில் இருப்பதாக சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர். டிரைலரை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

டிரைலர் வெளியிட்ட படக்குழுவினர் ரசிகர்களின் இன்ப அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு இன்ப அதிர்ச்சியையும் சேர்த்து அளித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கின்றனர்.இறுதியாக தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகிவிட்டது. வாரிசு படமும் தைப்பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதுதான் அந்த இன்பமான செய்தி.

Advertisement

இதனால் தமிழ் திரையுலகம் மீண்டும் ஒரு தல தளபதி மோதலுக்கு தயாராகிவிட்டது . இந்த வாரிசு திரைப்படமானது தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் வம்சி அவர்களால் இயக்கப்பட்டு இருக்கின்றது . படத்திற்கு இசையும் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளரான தமன் அவர்கள் இசையமைத்திருக்கிறார் . இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கின்றன . தளபதியின் ஆட்டத்துடன் இந்தப் படத்தை வெள்ளித்திரையில் காண தளபதியின் ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top