Monday, November 4, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇடுப்பில் துண்டு.. தன் மனைவி நஸ்ரியாவைப் போலவே நடிகர் பகத் பாசில் குத்தாட்டம்.. வீடியோ வைரல்.....

இடுப்பில் துண்டு.. தன் மனைவி நஸ்ரியாவைப் போலவே நடிகர் பகத் பாசில் குத்தாட்டம்.. வீடியோ வைரல்.. !

நடிகர் பகத் பாசில் இந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவர். வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தக்கூடியவர். இவருடைய லேட்டஸ்ட் திரைப்படமான ‘ ஆவேசம் ’ இன்று பக்ரீத் பண்டியையொட்டி வெளியாகியுள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டு காமெடி வகையில் உருவான ரோமஞ்சாம் எனும் மலையாளத் திரைப்படம் மிகச் சிறந்த வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் ஆனது. அப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் தான் பகத் பாசில் நடிப்பில் இந்த ஆவேசம் படத்தையும் இயக்கியுள்ளார். தன் முதல் படம் போலவே இயக்குனர் இப்படத்தையும் நகைச்சுவையாக சிறப்பாக இயக்கியுள்ளார் என நல்ல விமர்சனங்கள் வந்துள்ளது.

படத்தின் புரொமோஷனுக்காக நேற்று புரோமோ டீஸர் என்று வெளியானது. அதில் நடிகர் பகத் பாசில் அமர்க்களமாக நடனமாடியிருப்பார். பாத்ரூமில் இருந்து துண்டோடு நடனமாடிக் கொண்டே வரும் பகத் பாசிலின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இது அவரது மனைவி நஸ்ரியாவின் நடனத்தை நினைவூட்டுவதாக சமூக வலைத்தளத்தில் சிலர் பதிவிட்டுள்ளார்கள்.

- Advertisement -

ராஜா ராணி படத்தில் நஸ்ரியா அறிமுகக் காட்சியில் நைட்டியை தூக்கிக் கட்டி பல்துலக்கிக் கொண்டே ஒரு குத்தாட்டைப் போடுவார். அது என்றும் அவரது ஸ்பெஷலாக ரசிகர்கள் மத்தியில் கருதப்படும். அதே போல பகத் பாசிலும் குளித்துவிட்டு நடமாடுவது நஸ்ரியாவின் ஆட்டத்தைப் போலவே தெரிந்தது. இந்த நடன அமைப்பை சாண்டி மாஸ்டர் வடிவமைத்துள்ளார்.

- Advertisement -

டிரெய்லர், புரோமோ என நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரையரங்கிலும் அதைத் தக்கவைதுள்ளது. மலையாள சினிமாவின் அடுத்த ஹிட் என்றே கூறலாம். இந்த ஆண்டு ஆட்டம், பிரேமலு, மஞ்சுமேல் பாய்ஸ், பிரம்மயுகம், ஆடு ஜீவிதம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து ஆவேசம் படமும் சூப்பர்ஹிட் பட்டியலில் இணைகிறது. இந்த ஆண்டு மலையாள சினிமாவுடையது.

Most Popular